500 ரூபாயில் பெங்களுரூ - கொச்சி விமான பயணம்.. ஏர்ஏசியா

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இந்தியாவின் மலிவு விலை விமான நிறுவனமான ஏர்ஏசியா நிறுவனம், இந்திய கிளை ஞாயிற்றுக்கிழமை முதல் பெங்களுரூ முதல் கொச்சி வரை புதிய விமான வழிதடத்தில் தனது சேவையை துவங்கியுள்ளது. இச்சேவையை இந்நிறுவனம் தனசரி சேவையைாக அளிக்கவுள்ளது. இச்சேவை பெங்களூரில் இருந்து துவக்கப்பட்டது.

 

சேவை துவக்கத்தின் காரணமாக இத்திட்டத்திற்கு வெறும் 500 ரூபாய் என்ற குறைந்த விலையில் ஏர்ஏசியா இப்பயணச் சேவையை அளிக்கிறது.

(Read this: 4 reasons not to buy the Kissan Vikas Patra)

முதல் பயணம்

முதல் பயணம்

பெங்களூரில் இருந்து கொச்சிக்கு இந்நிறுவனம் குறித்த நேரத்திற்கு 6 நிமிடங்கள் முன்னதாகவே தரையிறங்கியது, இதே போல் கொச்சியில் இருந்து 3 நிமிடம் முன்னதாகவே பெங்களூருக்கு தனது பயணத்தை துவங்கியதாக கொச்சி விமான நிலையைம் தெரிவித்தது. இந்த விரைவான சேவை பயணிகளை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடதக்கது.

குறைந்த விலை சீட்டு

குறைந்த விலை சீட்டு

இந்நிறுவனம் சேவை துவக்கத்தின் காரணமாக வாடிக்கையாளரை கவரும் விதத்தில் 500 ரூபாய் என்ற குறைந்த விலையில் சில பயணச்சீட்டுகளை ஒதுக்கியது.

முதல் முறை விமான பயணம்

முதல் முறை விமான பயணம்

கொச்சி எங்கள் நிறுவனத்தின் முன்றாவது இலக்கு, இதை துவங்கும் போது நாங்கள் முதல் முறையாக விமான பயணம் செய்யும் பயணிகளை அதிகளவில் பெற பல தரப்பட்ட ஆய்வுகளை ஏர்ஏசியா மேற்கொண்டது என இந்நிறுவனத்தின் தலைமை செயல்திட்ட அதிகாரியான மித்து சந்திலியா தெரிவித்தார்.

ஏர்ஏசியா
 

ஏர்ஏசியா

இந்நிறுவனம் கடந்த ஜூன் 12 முதல் பெங்களூரில் இருந்து கோவா, சென்னை ஆகியவற்றிற்கும், ஞாயிற்றுகிழமை இருந்து கொச்சிக்கும் இந்நிறுவனம் விமான சேவையை அளித்து வருகிறது. இந்நிறுவனத்தின் குறைந்த விலை சேவை கட்டணத்தால் இந்தியாவின் பிற விமான நிறுவனங்களுக்கு இந்நிறுவனம் கடும் நெருக்கடியை அளித்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

AirAsia India starts Bangalore-Kochi flight, starting fare Rs 500

AirAsia India, the domestic arm of Malaysian airline AirAsia, on Sunday added Kochi to its network with the launch of a daily flight service from Bangalore.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X