மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த சனிக்கிழமை தனது காலாண்டு முடிவுகளை அறிவித்தது. 2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு ஜூன் 30 முடிவில் இந்நிறுவனம் 5.5 சதவீத வளர்ச்சியுடன் 5,649 கோடி ரூபாய் லாபத்தை பெற்றுள்ளது.
இந்நிறுவனத்தின் நிர்வாக பணிகளுக்கான அதிகளவில் நிதி ஒதுக்கியதன காரணமாக நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு லாபம் 2,000 கோடி ரூபாய் அளவு குறைந்துள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.
மொத்த லாபம்
இந்நிறுவனத்தின் மொத்த லாபம் 14 சதவீதத்தை எட்டி 5,957 கோடி ரூபாயாக இருந்தது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்க ஷேல் காஸ் வர்த்தகம் சுமார் 320 சதவீதம் உயர்ந்து 559 கோடி ரூபாயை இந்நிறுவனத்திற்கு பெற்றுத்தந்தது. இதனிடையில் தினமும் 13 மில்லியன் மெட்ரிக் ஸ்டான்டட் கியூபிக் மீட்டர் ஆயில் உற்பத்தி செய்கிறது.
சுத்திகரிப்பு வர்த்தகம்
இந்நிறுவனத்தின் சுத்திகரிப்பு வர்த்தகம் இந்த காலாண்டில் 29 சதவீதம் உயர்ந்து 3,814 கோடி ரூபாய் என்ற அளவில் உயர்ந்தது, அதேபோல் இத்துறையில் வருவாய் 7 சதவீதம் உயர்ந்து 98,081 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதர வருவாய்
இந்நிறுவனத்தின் அதர வருவாயாக 2535 கோடி ருபாயாக இருந்தது குறிப்பிடதக்கது.
ரிலையன்ஸ்
முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் இந்நிறுவனத்திற்கு மத்திய எண்ணெய் கட்டுப்பாட்டு வாரியம் குறைவான உற்பத்தியின் காரணமாக 500 மில்லியன் டாலருக்கு மேல் அபராதம் விதித்தது குறிப்பிடதக்கது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications