தமிழக முதல்வரை சந்தித்த உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம், சென்னையில் திங்கட்கிழமை மதியம் 3 மணியளவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுடன் தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் திட்டங்களை அமல்படுத்துவதை குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அவர்களுடன் உலக வங்கியின் கிளையின் முக்கிய அதிகாரிகளுடன் கலந்து கொள்கின்றனர்.

 

ஜிம் யாங் கிம் அவர்களின் முன்று நாள் இந்திய பயணத்தில் பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோரை சந்தித்துள்ளார். உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதிக்கத்தை குறைக்க பிர்க்ஸ் வங்கி துவங்கி சில நாட்களில் இவரது இந்திய சுற்றுப்பயணம் மிகுந்த கவணிக்கதக்க உள்ளது.

சென்னையில் ஜிம் யோங் கிம்..

சென்னையில் ஜிம் யோங் கிம்..

இந்த சுற்றுப் பயணத்தில் ஜிம் சென்னையை சுற்றியுள்ள மிகப்பெரிய கட்டுமான திட்டங்களை சுற்றிப்பார்த்த பின்பு, முக்கிய வங்கிகளின் தலைவர்களையும் சந்தித்து சில முக்கிய திட்ட நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

வறுமை ஒழிப்பு திட்டம்

வறுமை ஒழிப்பு திட்டம்

உலக வங்கி, மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறையுடன் இணைந்து தமிழ்நாட்டில் 2005ஆம் ஆண்டு துவங்கிய 1,667 கோடி ரூபாய் மதிப்புள்ள வருமை ஒழிப்பு திட்டத்தின் செயல்பாட்டை பார்வையிட உள்ளதாக யோங் கிம் தெரிவித்தார்.

திட்ட துவக்கம்
 

திட்ட துவக்கம்

இந்த 6 வருட திட்டம் 2005ஆம் ஆண்டு துவக்கப்பட்டு, இதை 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. இதற்காக உலக வங்கி 717 கோடியும், மாநில அரசு மீதமுள்ள தொகையும் அளிக்க ஒப்பந்தும் இடப்பட்டது. பின்னாளில் 9.6 இலட்ச ஏழை மக்களுக்கு உதவி அளிக்கும் வகையில் உலக வங்கி 950 கோடி ரூபாய் வரை நிதி உதவி அளிக்க 2010ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்தது.

சந்திப்பு

சந்திப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடனான சந்திப்பில் திட்ட நடவடிக்கை, எதிர்கால திட்டங்கள் குறித்து பேசவுள்ளதாகவும், மேலும் தமிழக அரசு அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தி இருப்பதாகவும், உலக வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மொத்த கடன்

மொத்த கடன்

ஜூன் 30, 2014ஆம் ஆண்டின் கணக்கின் படி உலக வங்கியின் முன்று வங்கிக் கிளைகளில் இந்தியா மொத்தம் 323 திட்டங்களுக்கு 29.9 பில்லியன் டாலர் கடன் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

World Bank Group president meeting Jayalalithaa at 3 p.m.

World Bank Group President, Jim Yong Kim, along with key India officials of the global financing institution, will meet State Chief Minister, J Jayalalithaa, at 3 p.m. today to discuss the implementation modalities of poverty alleviation projects in the State.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X