மோடி அரசிற்கு காங்கிரஸ் உருவாக்கிய "டைம் பாம்"!! எல்ஐசி

டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் வழக்குகளில் ஒன்று 2ஜி ஸ்பெக்ட்ரம், இந்த வழக்கில் சிக்கிய நிறுவனங்களில் எண்ணிக்கை பல, அதில் முக்கியமான நிறுவனம் "யூனிடெக்" தான். இந்நிறுவனத்திற்கு பண ரீதியில் முழு ஒத்துழைப்பு கொடுத்தது பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.

இந்த வழக்கை ஆய்வு செய்த நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"தனியார் நிறுவனத்தின் நலனுக்காக ஒரு பொது துறை நிறுவனம் (முழுக்க முழுக்க மக்களின் பணம்) பலி ஆடு ஆகியுள்ளது. மேலும் இது சட்டத்திற்கு முற்றிலும் புறம்பானது, இந்த முதலீட்டு திட்டத்தில் பல விதிமீறல்கள் உள்ளது" என அவர் தெரிவித்தார். இந்த உயர் அதிகாரி நிதியமைச்சகத்தில் இருந்து வலுக்கட்டாயமாக கடந்த மார்ச் 31, 2014ஆம் ஆண்டில் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார்.

சொம்பு துக்கும் எல்ஐசி

சொம்பு துக்கும் எல்ஐசி

மேலும் அவர் கூறுகையில் "இந்த முறையற்ற விதிமீறல்களின் மூலம் இந்த முதலீட்டில் ஒவ்வொரு கட்டங்களிலும், அதாவது கடன் மதிப்பீட்டில், ஒப்புதல், அனுமதி மற்றும் பிந்தைய ஒப்புதல் / தள்ளுபடி ஆகிய அனைத்து கட்டங்களிலும் அபராதத்திற்கு உட்படுத்தும் படியான தவறுகள் உள்ளது. மேலும் அதிகப்படியான கடனை இந்த தனியார் நிறுவனத்திற்கு எல்ஐசி முறையற்ற வகையில் அளித்துள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் தலையில் துண்டு!!

மக்கள் தலையில் துண்டு!!

இந்த எல்ஐசி மற்றும் யூனிடெக் நிறுவனங்களுக்கு மத்தியில் நடக்கும் இந்த மறைமுகமான வேலையில், யார் பலன் பெறுகின்றனர் என்று பார்த்தால் யூனிடெக் தான். வழக்கம் போல் மக்கள் கண்களில் மண்ணை தூவி தனியார் நிறுவனங்கள் நன்மை பெறுகின்றன.

எல்.ஐ.சி

எல்.ஐ.சி

பொதுவாக எல்.ஐ.சி நிறுவனம் இந்தியாவில் பல நிறுவனங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. ஆனாலும் எல்ல நிறுவனங்களும் கடனுக்கான தவணைகளை சரிவரி செலுத்தி வரும் நிலையில் மேற்படி கடனை எல்ஐசி அந்த நிறுவனங்களுக்கு வழங்கும். இந்த யூனிடெக் நிறுவனத்தை பொருத்த வரை எல்.ஐ.சி நிறுவனத்தின் செயல்பாடு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. யூனிடெக் நிறுவனம் தவணைகளை சரிவர செலுத்தவில்லை, ஆனாலும் மேற்படிய கடன் இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. மேலும் தவணை செலுத்த தவறியதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எல்.ஐ.சி எடுக்கவில்லை என்பது கவணிக்கதக்கது.

லஞ்ச ஒழிப்பு அமைப்பு

லஞ்ச ஒழிப்பு அமைப்பு

இந்த வழக்கை ஆய்வு செய்த லஞ்ச ஒழிப்பு அமைப்பின் தலைவர் கூறுகையில், யூனிடெக் நிறுவனத்தின் முறையற்ற தவணை செலுத்துதல் மற்றும் மேற்படிய கடன் பெறுதல் போன்ற எந்த ஒரு நிகழ்வின் மீதும் எல்ஐசி நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை, நடவடிக்கை எடுத்ததற்கான சாட்சியும் இல்லை என்று லஞ்ச ஒழிப்பு அமைப்பு தெரிவித்தது.

கடன் ஒப்புதல்

கடன் ஒப்புதல்

எல்ஐசி நிறுவனம் 2008ஆம் ஆண்டு சுமார் 200 கோடி ரூபாய் இந்நிறுவனத்திற்கு கடன் ஒப்புதல் அளித்தது. அதற்கு முன் இந்நிறுவனத்திற்கு 160 கோடி ரூபாய் முன்கூட்டிய கடன் இருந்தது. இதற்காக இந்நிறுவனம் 01.03.2010 முதல் 07.06.2015 காலநீட்டிப்பு பெற்றது.

பல கட்டங்களில் நிதி உதவி

பல கட்டங்களில் நிதி உதவி

பின்பு பல கட்டங்களில் எல்.ஐ.சி நிறுவனம் யூனிடெக் நிறுவனத்திற்கு கடன் வழங்கியது. இது மட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் நிறுவனக் கடனை கார்ப்பரேட் கடனாக மாற்றி அதன் கடன் அளவீட்டை எல்ஐசி நிறுவனம் அதிகரித்தது. மேலும் யூனிடெக் நிறுவனத்தின் மாற்றமுடியாத முதலீட்டு பத்திரங்களில் எல்ஐசி நிறுவனம் முதலீடு செய்தது.

பட்டியல்

பட்டியல்

மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை இரு நிறுவனங்கள் செய்த விதிமீறல்கள், எல்ஐசி உயர்மட்ட அதிகாரிகள் செய்த தவறுகள் என அனைத்தையும் பட்டியல் போட்டுள்ளது.

இதை எப்படி பார்க்க வேண்டும்

இதை எப்படி பார்க்க வேண்டும்

நீங்கள் இதுபோன்ற கடன் அளிப்பதை சாதாரணமாக பார்த்தால் இது மிகவும் தவறானது, எல்ஐசி நிறுவனம் மெத்தனமாக செயல்பட்டுள்ளது என்று நினைத்தாலும் தவறு. எல்ஐசி நிறுவனம் திட்டம்போட்டு கடனை வாரி வழங்கியுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.

பங்கு கைபற்றுதல்

பங்கு கைபற்றுதல்

லஞ்ச ஒழிப்பு துறையின் தலைவர் அண்ணா ராய் சமர்பித்த அறிக்கையில் எல்ஐசி நிறுவனம் ஜனவர் 31, 2014 முதல் பிப்ரவரி 7, 2014 வரை கைபற்றிய பங்குகளில் முறையற்ற வகையில் யூனிடெக் நிறுவனத்தின் பங்குகளை தனியார் நிறுவனங்களுக்கு சாதகமான விலையில் வாங்குவது விற்பதுமாகவே இருந்தது தெரியவந்துள்ளது.

ரூ.17 இலட்சம் கோடி

ரூ.17 இலட்சம் கோடி

17 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள (எல்.ஐ.சி) நிறுவனத்தில் வெறும் 500 கோடி ரூபாயில் மோசடி நடந்தால் என்ன பெரிய விஷயமா என்று பார்த்தால் அது முற்றிலும் முட்டால் தனம். அவை அனைத்தும் மக்களின் பணம். இவற்றில் விளையாடுவது உங்களின் பணம். இதேபோல் 10 நிறுவனங்களுக்கு எல்ஐசி உதவினால். நம் குடும்பத்திற்கு கிடைக்க வேண்டிய ஆயுள் காப்பிட்டு தொகையில் குறையும்.

காங்கிரஸ்

காங்கிரஸ்

இந்த ஊழல் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடந்த ஒன்று, இதனால் 2ஜி வழக்கு முடியும் போது எல்ஐசி நிறுவனம் ஒரு பூகம்பம் போல் வெடிக்கும். இந்த ஏரிமலை வெடிக்கும் முன் மத்திய அரசு அதனை கட்டுக்குள் கொண்டு வந்தால் நலம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+