டெல்லி: இந்தியாவில் இருக்கும் அனைத்து தபால் நிலையங்களுக்கும் நிலையான மற்றும் சரியான டிஜிட்டல் தொடர்பை ஏற்படுத்துவதே மத்திய அரசின் முக்கிய பணியாக உள்ளது, என் தொலைதொடர்பு அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் தொலைதொடர்பு துறைக்கு சார்ந்த வந்த கேள்விகளுக்கு பதில் அளித்த ரவி ஷங்கர், பிரசமர் நரேந்திர மோடி தனிப்பட்டமுறையில் சில துறைகளை கவனித்து வருகிறார். இதில் தபால் துறையும் ஒன்று என அவர் தெரிவித்தார்.
வங்கி உரிமம் பெற்ற தபால் துறை..
நாடாளுமன்ற உறுப்பினரான பிஜூ எழுப்பி கேள்விகளுக்கு, மாதிரி வங்கி உரிமம் பெற்ற தபால் துறையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல எப்படி செயல்பட வேண்டும் என பிரதமர் ஒன்றை மணி நேரம் விளக்கம் அளித்ததாகவும் ரவி ஷங்கர் தெரிவித்தார்.
தபால் துறை
மேலும் அவர் கூறுகையில் இந்திய தபால் துறையில் அதிகப்படியான மாற்றங்கள் தேவை எனவும், குறிப்பாக கிராம மக்கள் பயனடைய கிராமீன் டக் கார் திட்டத்தை மேம்படுத்தவும் தொலைதொடர்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பி.எஸ்.என்.எல்
மேலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மேம்படுத்த பல தரப்பட்ட முயற்சிகள் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இன்னும் 5 வருடங்களில் இந்தியாவின் முக்கிய தொலைதொடர்பு சேவை நிறுவனங்களில் பி.எஸ்.என்.எல் நிறுவனமும் ஒன்றாக இருக்கும்.
கேவலமான மொபைல் நெட்வொர்க்
நக்சல் தாக்குதலுக்கு பாதிப்படைந்த மகாராஷ்ராவின் சில முக்கிய பகுதிகளில் பி.எஸ்.என்.எலின் மொபைல் நெட்வொர்க் மிகவும் மோசமான நிலையில் உள்ளதை காங்கிரஸ் அசோக் சவான் தெரிவித்தார். இப்பிரச்சனையை USOF திட்டத்தில் அடுத்த 15 மாதங்களில் இப்பகுதியில் சிறப்பான மொபைல் சேவையை அளிக்கப்படும் என ரவி ஷங்கர் தெரிவித்தார்.
புதிய டவர்கள்
USOF திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இந்தியாவின் 9 மாவட்டங்களில் 1,836 டவர்களை நிறுவ தொலைதொடர்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மேலும் டீசல் பற்றாக்குறையால் சில இடங்களில் நெட்வொர் தடைபெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications