டெல்லி: பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்ரிக்கா (BRICS)ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள அமைப்பு பிரிக்ஸ் எனப்படுகிறது. இந்நாட்டுத் தலைவர்கள் உலக வங்கியின் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆதிக்கத்தை குறைக்க அண்மையில் பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி என்ற வங்கியை வளர்ந்து வரும் நாடுகளால் முதன் முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியைப் பற்றிய சில முக்கிய தகவல்களை இப்போது நாம் இங்கு காண்போம்.
(Read this: 5 mutual fund schemes in India with a good track record)
துவக்க மூலதனம்
பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்கள் இந்த வங்கியை ஐம்பது பில்லியின் டாலர்கள் மூலதனத்துடன் துவக்கி வைத்தனர். இவ்வங்கி மேலும் 10 பில்லியன் டாலர் வரை திரட்டவும் திட்டமிட்டுள்ளது. இத்தொகை இந்த வளரும் நாடுகளுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படும்போது நிதியுதவி அளித்து உதவி செய்யும்.
முதல் தலைவராக இந்தியர்
இந்த வங்கியின் முதல் தலைவராக ஒரு இந்தியரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்திய அரசு இப்பதவிக்குப் பொருத்தமான ஒரு நபரை தேர்வு செய்ய வேண்டியுள்ளது.
வளர்ந்து வரும் நாடுகளின் வங்கி
இந்த முயற்சி உலக நிதி அமைப்புகளில் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தைக் குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெருக்கடி நிலைகளில் வளர்ந்துவரும் நாடுகள் நிதி ஆதாரங்களைப் பெற இது உதவும்.
ஷாங்காய் நகரில் தலைமை அலுவலகம்
சீனாவின் ஷாங்காய் நகரம் இந்த வங்கியின் தலைமையிடமாகத் திகழும். சிறந்த கட்டமைப்பு வசதிகள், தனியார் நிதி ஆதாரங்கள் பெற வாய்ப்புகள் மற்றும் முதலீட்டாளர்களின் மையம் ஆகியவை ஒருசேரக் கிடைப்பதால் இந்த நகரத்தை பிரிக்ஸ் அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2016-ல் பணிகள் துவக்கம்
இந்த வங்கி தன் பணிகளை 2016 ஆம் ஆண்டு துவங்க உள்ளது. உலகிலேயே அந்நிய செலாவணி இருப்புகளை அதிக அளவில் கொண்டுள்ள சீனா, இந்த வங்கியின் அவசர கால நிதியில் ஒரு பெரும் பங்கை அளிக்கும்.


Click it and Unblock the Notifications