மும்பை: இந்தியர்களின் சமையல் அறையில் மிக முக்கியான உணவு பொருட்களில் தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவை அதிகளவில் பயன்படுத்தும் பொருட்களில் சில. ஆனால் இப்போது அதன் விலையை கேட்டாலே தலை சுற்றுகிறது.
குறிப்பாக தக்காளி மற்றும் பச்சை மிளகாயின் விலை கேட்டால் சாப்பாடு தொண்டையில் இறங்குவதில்லை. கடந்த முன்று மாதங்களில் தக்காளியின் விலை 400 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் மிளகாயின் விலை 60 சதவீதம் அதிகரித்துள்ளது.
(Read This: 5 facts on the National Savings Certificates that make it an attractive investment)
யார் செய்த குற்றம்.. மழை செய்த குற்றம்..
பருவ மழையின் சதி நம்மை வாட்டி வதைக்கிறது. தக்காளியின் விலை ஜூலை மாதத்தின் துவக்கத்தில் இருந்தே சீரிப்பாய்ந்து வருகிறது. இந்தியாவின் பெரு நகரங்களில் தக்களியின் விலை 60 ரூபாய் முதல் 70 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமபுறம் மற்றும் சிற்றூர்களிலும் இந்த விலை ஏற்றத்தின் தாக்கம் அதிகளவில் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
12 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை
இந்தியாவில் சராசரியாக கடந்த மே- ஜூன் மாதங்களில் 10 முதல் 12 ரூபாய் என்ற அளவில் மட்டும் தான் விற்பனைக்கு வந்தது. ஆனால் அடுத்த இரு மாதங்களில் அதிகப்படியான ஏற்றுமதியின் காரணமாக தக்காளியின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.
பச்சை மிளகாய்
தக்காளியை தொடர்ந்து கடந்த சில மாதங்களில் அதிகளவில் விலை உயர்ந்த பொருட்களில் பச்சை மிளகாயும் ஒன்று. ஜூன் மாதத்தில் ஒரு கிலோ மிளகாய் 22 முதல் 25 ரூபாய் என்ற அளவில் விற்கப்பட்டது, ஆனால் இப்போது 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மும்பை சந்தை
மும்பை மக்களுக்கும் இந்தியாவின் எல்லா பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் வருகிறது. அப்படி வரும் காய்கறிகள் 75 சதவீதம் மாகராஷ்ரா பகுதியில் இருந்தும், 15 சதவீதம் குஜராத்தில் இருந்தும், 10 சதவீதம் மத்திய பிரதேசம், கர்நாடக, ஆந்திர பிரதேசம் மற்றும் ஹீமாச்சல் பகுதியில் இருந்தும் குவிகிறது. சென்னை கோயம்பேடு மார்கெட்டும் அதுபோல தான், இந்தியா முழுவதிலும் இருந்து காய்கறிகள் வந்து குவிகிறது.
விலையேற்றம்
இந்த விலையேற்றத்திற்கு மழை மட்டும் காரணம் அல்ல எரிபொருளின் விலையேற்றமும் முக்கிய இடம் வகிக்கிறது. காய்கறி போக்குவரத்துக்காக இதன் விலை 7 முதல் 8 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications