இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை 16% உயர்வு...

சென்னை: இந்தியாவில் ஏழை மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பணக்காரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. ஆண்டு வருமானம் 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பெறும் மக்களை அல்ட்ரா ரிச் என அழைக்கப்படுவார்கள், இத்தகையவர்களை கொண்டு தான் இந்த ஆய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2013-14ஆம் ஆண்டு காலகட்டத்தில் அல்ட்ரா ரிச் பணக்காரர்களின் எண்ணிக்கை 16 சதவீதம் அதிகரித்து 1.17 இலட்சம் பேராக அதிகரித்துள்ளனர்.

புது அல்ட்ரா ரிச் பணக்காரர்களாக சிலர் ஆனாலும் இவர்களின் முதலீடு செய்யும் முறையும், செலவிடும் முறை எதுவும் மாறவில்லை என்பதே உண்மை.. அப்படி இந்த புது பணக்காரர்கள் என்னதான் பன்றாங்கனும் கோட்டாக் குரூப் மற்றும் எர்னஸ்ட் & யங் இரு நிறுவனங்களும் சேர்ந்து ஒரு ஆய்வை செய்தது. இதில் உள்ள சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம் வாங்க..

(Read This: 5 facts on the National Savings Certificates that make it an attractive investment)

தங்கமே.. வைரமே...

தங்கமே.. வைரமே...

மக்கள் எவ்வளவு தான் நாகரிகத்தில் வளர்ந்தாலும், கதர் துணிகளில் இருந்து ஆர்மானி சூட்-க்கு மாறினாலும் தங்கம், வைரத்தின் மீதுள்ள ஆசை சற்றும் குறையவில்லை என்பதே உண்மை. அதில் அல்ட்ரா ரிச் பணக்காரர்களும் அடக்கம். இந்த 1.17 இலட்சம் எண்ணிக்கையில் 16 சதவீதம் பேர் தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகளில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். இனி இவர்கள் செய்யும் சில அட்டூளியம் மற்றும் சில நல்ல விஷயங்களை பார்போம்.

உணவு பழக்கம்..

உணவு பழக்கம்..

இத்தகைய பணக்காரர்களில் 60 சதவீதம் பேர் அதிக எடையுடன் இருக்கின்றனர். இதற்கும் முக்கிய காரணம் இவர்களது உணவு பழக்கும் தான். இவர் இந்திய உணவுகளை விரும்புவதை விட ஆசிய அல்லது இத்தாலிய உணவுகளை அதிகளவில் வரும்புகின்றனர். இத்தகைய உணவையும் 4 ஸ்டார் மற்றும் 5 ஸ்டார் ஹோட்டல்களில் மட்டுமே சாப்பிடுகின்றனர்.

அன்பளிப்பு

அன்பளிப்பு

இத்தகைய பணக்காரர்கள் அவர்களது மனம் கவர்ந்தவர்களுக்கும் அதிகளவில் பரிசு அளிப்பது விலை உயர்ந்த வாட்சுகளை தான். வாட்சுகளை தொடர்ந்து வைர நகைகள், ஆக்ஸெஸரீஸ், மொபைல், கார் மற்றும் காஸ்லியான பிளாட் போன்றவற்றை தருகிறார். நாம் இங்கு மாத கடைசியில் யாரிடம் கடன் வாங்குவது என யோசிக்கும் போது, இவர்கள் இந்த அளவிற்கு சேட்டை செய்கிறார்கள்.

பார்ட்டி... கொண்டாட்டம்...

பார்ட்டி... கொண்டாட்டம்...

இவர் தங்கள் வாழ்வில் முக்கியமான நிகழ்வுகளை அதாவது பிறந்த நாள், கல்யான நாள், பிஸ்னஸில் வெற்றி என எதற்கு எடுத்தாலும் பார்ட்டி கொடுக்கிறார்கள். இந்த பார்ட்டியில் பெரிய பணக்காரர்கள், சினிமா நச்சத்திரங்கள், உயர் தர உணவுகள் என பலவற்றும் உள்ளடங்கிறது.

ஆரம்பர சுற்றுலா..

ஆரம்பர சுற்றுலா..

இந்த அல்ட்ரா ரிச் பணக்காரர்கள் வருடத்தில் 3 முறையாவது வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார்கள். சுற்றுப்பயணம் தானே என்று நினைக்காதிர்கள் அவர்கள் போகும் சுற்றுலாவுக்கு ஒரு நாளின் குறைந்தபட்ச செலவு மட்டும் 2 இலட்சம். நடுத்தர மக்களின் ஒருவரின் வருடத்தின் சம்பளமே 2 இலட்சம் தான்.

சுற்றுலாவில் முக்கியம் ஷாப்பிங்...

சுற்றுலாவில் முக்கியம் ஷாப்பிங்...

இவர்களுக்கும் சுற்றுலா போவதில் ஒரு பிரச்சனையும் இல்லை, இவர் செய்யும் ஷாப்பிங் தான் நம்மை கதிகலங்க வைக்கிறது. எந்த நாட்டுக்கு சென்றாலும் இவர்களது முக்கியப் பணி ஷாப்பிங் தான். ஷாப்பிங் பின்பு இவர்கள் ஊர் சுற்ற அதிகம் விரும்பும் இடம் பீச், மலைகல், காட்டுகுள் பயணம், கப்பல் பயணம் என லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.

நாங்களும் நல்லவர்கள் தான்..

நாங்களும் நல்லவர்கள் தான்..

இந்த பணக்கார்களில் 650 பேரை கோட்டாக் குருப் நேர்காணல் செய்தது. இவர்களிடம் "மக்களுக்கும் சமுதாயத்திற்கும் நீங்கள் கொடுக்க நினைப்பது எது??" என்ற கேள்வியை முன்வைத்தது. இதில் 86% பேர் கல்வி என்றும், 79% ஏழைகளுக்கு சிறந்த உணவு என்றும், 73% முதியோர்களுக்கு சேவை என்றும், 58% மருத்துவ உதவி எனவும், இதை தொடர்ந்து உணமுற்றோர்களுக்கு உதவி, பெண் குழந்தைகளை காப்பாற்றுதல், வறுமையை ஒழித்தல், சுகாதாரம், பெண் கொடுமைகள் என பலவற்றை இவர்கள் முன்வைத்தனர்.

பங்கு சந்தை மற்றும் ரியல் எஸ்டேட்

பங்கு சந்தை மற்றும் ரியல் எஸ்டேட்

பணத்தை பெருவது என்ற கூட்டுக்குள் வந்தால் இவர்களின் ஒருமித்த கருந்து பங்கு சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் மட்டும் தான். குறைந்த காலத்தில் அதிகப்படியான லாபத்தை அள்ளிவிடும் சில துறைகளில் இவை இரண்டும் முதன்மையானவை.

ஆரம்பர வீடுகள்

ஆரம்பர வீடுகள்

இந்தியாவில் ஆரம்பர வீடுகளின் எண்ணிக்கை கடந்த 4 வருடத்தில் 24 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் இத்தகைய ஆடம்பர வீடுகளின் விற்பனை கடந்த ஒரு வருடத்தில் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+