மும்பை: கடும் போட்டிக்கு இடையில் கடனில் தத்தளித்த ஜெய்பீ குழுமத்தின் ஹைட்ரோ எலக்டிரிக் திட்டங்களை ஞாயிறு கிழமையன்று அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் கைபற்றியது. இத்திட்டங்கள் கைபற்ற கெளதம் அதானி மற்றும் சஞ்சன் ஜிந்தால் ஆகியோர் கடும் போட்டி போட்டனர், ஆனால் போட்டிகளை மீறி மிஸ்டர்.அனில் இதை கைபற்றிவிட்டார்.
இந்த திட்ட விற்பனையின் மூலம் ஜெய்பீ குழுமத்தின் 10,000 கோடி மதிப்புள்ள ஹைட்ரோ எலக்டிரிக் (நீர்மின்) திட்டங்களை அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் கைபற்றியுள்ளது.
ரிலையன்ஸ் பவர்
இந்தியாவில் நீர்மின் உற்பத்தி நிறுவனங்களில் மிகப்பெரிய தனியார் நிறுவனம் ரிலையன்ஸ் பவர் தான். 2015ஆம் ஆண்டுக்குள் இந்நிறுவனம் சுமார் 7,800 மொக வாட் மின் உற்பத்தி செய்யும் அளவிற்கு இந்நிறுவனம் உருமாற உள்ளது. மேலும் இந்நிறுவனம் அருணாச்சல பிரதேசம், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் இந்நிறுவனம் 5000 மொகவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஜெய்பீ குழுமம்
இந்நிறுவனம் சுமார் 5,800 கோடி ரூபாய் கடனில் உள்ளது. இந்த திட்ட பரிமாற்றத்தின் முலம் கிடைத்த 10,000 கோடி பணத்தில் இந்நிறுவனம் தனது கடனில் பெரும் பகுதியை குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.
ஹைட்ரோ எலக்டிரிக் திட்டங்கள்
இந்த ஒப்பந்தத்தில் இமாச்சல பிரதேசத்தில் கர்ச்சம் வாங்டூ (1,091 MW), பாப்சா (300 MW) ஆகிய திட்டங்களும் உத்தரகாண்டு மாநிலத்தின் விஷ்னுபிரயாக் (400 MW) ஆகிய திட்டங்களும் இதில் அடங்கும்.
6 மாத காலம்
இந்த திட்ட பரிமாற்றகள் அனைத்தும் அடுத்த ஆறுமாத காலத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்து விடும் என ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு முக்கிய வர்த்தக செய்தி நிறுவனத்திற்கு அறிவித்துள்ளது.
அபுதாபி
ரிலையன்ஸ் நிறுவனம் மட்டும் அல்லாமல் அபுதாபி நேஷனல் எலக்ட்ரிக் நிறுவனம் ஜெய்பீ நிறுவனத்தின் இரண்டு முக்கிய திட்டங்களை 1.6 பில்லியன் டாலருக்கும் கைபற்றியுள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications