டெல்லி: இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு சில்லறை வர்த்தகத்தில் களமிறங்கிய அமேசான் நிறுவனம். பிளிப்கார்ட் நிறுவனம் 1 பில்லியன் டாலர் நிதி திரட்டிய செய்தியை கேட்ட உடனேயே, அமேசான் நிறுவனம் இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த சுமார் 2 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது.
உண்மையில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் உரிமையாளர்களான சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் அகியோர் தங்களது கல்லூரி படிப்பை முடித்து விட்டு அமேசான் நிறுவனத்தில் சேர்ந்தனர். அங்கே தான் அவர்கள் ஆன்லைன் வர்த்தகம் பற்றி முழுமையாக கற்றுக்கொண்டனர்(ஸ்கூல்). பின்பு 2007ஆம் ஆண்டு இந்தியாவில் பிளிப்கார்ட் நிறுவனத்தை துவங்கினர்.
(Read: 5 reasons to immediately convert your insurance certificates in electronic form at zero cost)
அமேசான்
இந்திய முதலீட்டை பற்றி அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பீசோஸ் கூறுகையில்,"இந்தியாவின் முதல் வருட வர்த்தகத்தில் எங்களின் கணிப்புகள் மிஞ்சய வியாபாரத்தை சந்தித்துள்ளோம், மேலும் அடுத்த சில வருடங்களில் புதிய உயரங்களை எட்டும் சந்தையை அதிகளவில் கைபற்றவும் திட்டங்களை தீட்டியுள்ளோம்" என அவர் தெரிவித்தார்.
இந்திய சந்தை
இந்திய சந்தையில் 2 பில்லியன் டாலர் முதலீடு செய்வதன் மூலம் மற்ற முன்னனி நிறுவனங்களை விட சிறப்பாக திட்டமிடவும், செயல்படவும் முடியும் எனவும் ஜெஃப் தெரிவித்தார்.
வேகமான வளர்ச்சி
இந்திய சந்தை எங்களுக்கு மிகவும் சாதகமான ஒன்று, இதற்கு முக்கிய காரணம் இந்திய மக்கள்தொகையில் பெரும் பகுதியினார் ஆன்லைன் சந்தையை பற்றி முழுமையாக தெரிந்தவர்கள். அமேசான் நிறுவனத்தின் சிறப்பான சேவை மற்றும் சலுகையை கொண்டு இவர்களை கவர மிகவும் எளிது என அவர் தெரிவித்தார்.
மார்க்கெட்
அமேசான் வலைதளத்தில் சுமார் 17 மில்லியன் பொருட்களை கொண்டு இந்தியாவின் மிகப்பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது. மேலும் அமேசான் நிறுவனம் இந்தியாவில் பல சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களின் பொருட்களை வர்த்தகப்படுத்த அமேசான் பெரிதும் உதவியுள்ளது.


Click it and Unblock the Notifications