பெங்களுரூ: நாட்டின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் உரிமையாளர்களான பன்சால் சகோதரர்களின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1 பில்லியன் டாலர் (ரூ.6000 கோடி) வரை உயர்ந்துள்ளது. குறைவான காலகட்டத்தில் வேகமாக வளர்ந்த இவர்களின் சொத்து மதிப்பு இப்போது இன்போசிஸ் நாராயண மூர்த்தி மற்றும் நிலேகனி அவர்களுக்கு இணையாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
பிளிப்கார்ட் நிறுவனம் கடந்த செவ்வாய் கிழமை இந்தியாவின் எந்த ஒரு இணைய தள நிறுவனங்களும் செய்ய முடியாத அளவிற்கு சுமார் 1 பில்லியன் டாலர் நிதியை திரட்டியுள்ளது.
(Read: Iwish recurring deposit from ICICI Bank: 6 reasons not to ignore it)
பன்சால் பிரதர்ஸ்..
இந்த நிதி திரட்டல் மூலம் இவர் இருவர்களின் சொத்து மதிப்பு சுமார் 15 சதவீதம் உயர்ந்து 6,000 கோடிக்கு ரூபாய் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்போசிஸ் நாராயண மூர்த்தி குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.8,700 கோடி, அதேபோல் நிலேகனி குடும்பத்தின் சொத்து மதிப்பு 6,500 கோடி மட்டுமே.
போட்டி
இந்தியாவில் இத்தகைய ஆன்லைன் சில்லறை வர்த்தக துறையில் போட்டி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பிளிப்கார்ட் நிறுவனம் நிறுவன வளர்ச்சிக்காக அதிகளவில் நிதி திரட்ட திட்டமிட்டது, அதன் ஒரு படியாக கடந்த மே மாதம் மட்டும் சுமார் 210 மில்லியன் டாலர் வரை நிதியை திட்டியது.
ஆடை விற்பனையில்
ஆன்லைன் வர்த்தகத்தில் ஆடை விற்பனையில் கடும் போட்டியை அளித்த மின்திரா நிறுவனத்தை பிளிப்கார்ட் சில மாதங்களுக்கு முன்பு முழுமையாக கைபற்றியது. மேலும் இந்தியாவில் அமேசான் மற்றும் இபே போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் களம் இறங்கிய சில மாதங்களில் இந்நிறுவனம் ஒரு சிறு சரிவை சந்தித்தாலும், பின்பு கடும் போட்டியை அளித்து.
நிதி திரட்டல்
இந்நிறுவனம் தற்போது எழாவது கட்டமாக நிதியை திரட்டி வருகிறது. இந்நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளர்கள் டைக்ர குளோபல், நேஸ்பர்ஸ், ஜிஐசி, சிங்கப்பூர் சவ்ரன் வெல்த் பண்ட் ஆகிய நிறுவனங்கள் முக்கிய முதலீட்டாளராக உள்ளனர். சந்தை ஆய்வாளர்கள் இந்நிறுவனத்தி மொத்த மதிப்பு சுமார் 6 - 7 பில்லியன் டாலர் வரை இருக்கும் மதிப்பீட்டுள்ளனர்.
பங்கு சந்தை
எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தேவையான நிதி மொத்தமும் கிடைக்கும் பட்சத்தில் பங்கு சந்தையில் பிளிப்கார்ட் இறங்க தேவை இல்லை என இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக் இயக்குனர் சச்சின் பன்சால் தெரிவித்தார்.
உலக நாடுகள்
அடுத்த கட்டமாக பிளிப்கார்ட் நிறுவனம் இந்தியாலை விட்டு அண்டை நாடுகளில் தனது சேவையை அளிக்க திட்டமிட்டுள்ளது. இதனால் சீனாவின் அலிபாபா நிறுவனத்தை போல இந்தியாவின் பிளிப்கார்ட் நிறுவனமும் உலக நாடுகளில் கால் தடம் பதிக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications