டெல்லி: இந்திய தொலைதொடர்பு சேவையில் முன்னோடியாக திகழும் ஏர்டெல் நிறுவனத்தின் காலாண்டு வருவாய் சுமார் 61 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும் இந்நிறுவனம் இந்தியாவில் 3ஜி சேவை அறிமுகம் செய்து அதிகப்படியான லாபத்தை அள்ளியுள்ளது. இந்தியாவில் அதிக தொலைதொடர்பு வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனங்களில் ஏர்டெல் முதல் இடம்.
கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தை ஒப்பிடும் போது இந்நிறுவனத்தின் வருவாய் வெறும் 689 கோடி ரூபாய் மட்டுமே, ஆனால் இந்த 2015ஆம் நிதியாண்டில் இதன் வருவாய் 1,108 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
இண்டர்நெட் டேட்டா
இந்நிறுவனத்தின் காலாண்டு அறிக்கையை பார்க்கும் போது, அதிகப்படியான வருவாய் இண்டர்நெட் டேட்டா சேவையில் இருந்து இந்நிறுவனம் பெற்றுள்ளது. மேலும் டேட்டா சேவையில் மட்டும் இந்நிறுவனத்தின் வருவாய் 73.9 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தில் வெறும் 6.2 மில்லியனாக இருந்த வாடிக்கையாளர் எண்ணிக்கை இந்த வருடம் 12.5 மில்லியனாக உயர்ந்துள்ளது.
கோபால் விட்டல்
ஏர்டெல் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தென் ஆசியா பகுதிகளின் சீஇஓவான கோபால் விட்டல் கூறுகையில்"நிறுவனம் எல்லா துறைகளிலும் சிறப்பான வளர்ச்சியில் உள்ளது குறிப்பாக, மொபைல் டேட்டா, டிடீஹெச் ஆகியவற்றில்". மேலும் இவர் இந்தியாவின் அனைத்து இடங்களிலும் 3ஜி சேவையை அளிக்கவும், நடைமுறையில் உள்ள சேவைகளை தடையற்றதாகவும், மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சராசரி வருமானம்
மேலும் ஏர்டெல் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் சராசரி வருமானமாக ஒரு மாதத்திற்கு 202 ரூபாய் ஏர்டெல் நிறுவனத்திற்கு கிடைக்கிறது. மேலும் ஆப்பிரிக்காவில் இந்நிறுவனத்தின் சேவைக்கு அதன் வருவாய் 17.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
3ஜி சேவை
ஏர்டெல் இந்தியாவை தவர ஆப்பிரிக்காவில் சுமார் 17 நாடுகளில் 3ஜி சேவையை அளித்து வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications