பெங்களுரூ: சமுக வலைதளமான பேஸ்புக், டிவிட்டர் தளங்களுக்கு அமெரிக்காவை அடுத்து இந்தியாவில் தான் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் உள்ளது. ஆனால் இந்த நிறுவனங்களுக்கு இந்தியாவில் இருந்து கிடைக்கும் வருமானம் மிகவும் குறைவு என்பதே நிதர்சனமான உண்மை.
இந்தியாவில் அதிக வருமானம் பெறும் இண்டர்நெட் நிறுவனங்களில் கூகிள் முன்னிலை வகிக்கிறது. கூகிள் நிறுவனம் அதன் விளம்பரங்களில் இருந்து அதிகளவில் வருமான பெருகிறது. பேஸ்புக் என்ன செய்கிறது.
இந்திய வாடிக்கையாளர்கள்
பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் சுமார் 100 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. அதேபோல் லிங்கிடு இன் நிறுவனத்திற்கு அதிகளவில் வாடிக்கையாளர் கொண்ட நாடுகளில் இந்தியா இரண்வது இடம். டிவிட்டருக்கு இந்தியா முன்றாவது இடத்தில் உள்ளது.
வருவாய்
வாடிக்கையாளர் கோடிக்கணக்கில் இருந்தாலும் வருவாய் என்னவோ மொத்த வருவாயில் 0.1 சதவீதம் கூட இந்தியாவில் இருந்து கிடைப்பதில்லை என பேஸ்புக் மற்றும் டிவிட்டர் நிறுவனம் தெரிவிக்கிறது. மேலும் இந்த நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து வருவாய் அதிகரிக்க புது புது திட்டங்கள் தொடர்ந்து போட்டுக் கொண்டு தான் இருக்கிறது.
ஸ்மார்ட்போன்
மேலும் இந்த நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் மூலம் வருவாய் திரட்ட முடிவு செய்துள்ளது. இதற்காக இந்நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களுக்காக பிரத்யேகமான மென்பொருள், திட்டங்கலை வடிவமைத்து வருகிறது.
இந்தியர்கள் கொஞ்சம் உசாரு....
பொதுவாக இந்தியர்கள் ஒரு வலைதளத்திற்குள் சென்றால் தளத்திற்கு தேவையற்ற எந்த ஒரு லிங்கையும் கிளிக் செய்யமாட்டார்கள் என இணையதள வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications