டெல்லி: மத்திய பட்ஜெட்டின் எதிரொலியாக இந்திய சந்தையில் ஜூலை மாதத்தில் மட்டும் அன்னிய முதலீடாக சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர் குவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல வளரச்சி திட்டங்களும், பல துறைகளில் அன்னிய முதலீட்டாகான அளவீடு தளர்க்கப்பட்டது இதனால் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் கொட்டி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இந்திய கடன் சந்தை மற்றும் பங்குசந்தையில் சுமார் 25 பில்லியன் டாலர் குவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல முதலீட்டு நிறுவனங்கள் கூறுகையில் இந்த அதிகப்படியான அன்னிய முதலீடு செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் மத்திய அரசின் பட்ஜெட் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் என தெரிவிக்கிறது. மேலும் அடுத்து வரும் மாதங்களில் அன்னிய முதலீட்டின் அளவு தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அன்னிய முதலீடு
ஜூலை மாதத்தின் 1ஆம் தேதியில் இருந்து 25 வரையிலான சந்தை தகவலின் படி அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையில் 2.2 பில்லியன் டாலரும், கடன் சந்தையில் 3 பில்லியன் டாலரும் முதலீடு செய்துள்ளனர். ஆக மொத்தம் கடந்த 25 நாட்களில் 5.2 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
காப்பீட்டு துறை
மத்திய அமைச்சகம் இந்திய காப்பீட்டு துறையில் அன்னிய முதலீட்டுக்கான அளவீட்டை 49 சதவீதத்திற்கு உயர்த்தியதை தொடர்ந்து சுமார் ரூ.25,000 கோடி இத்துறையில் அன்னிய முதலீடாக குவிந்துள்ளது.
ரயில்வே மற்றும் பாதுகாப்புத் துறை
மேலும் மத்திய அரசு கூடிய விரைவில் ரயில்வே மற்றும் பாதுகாப்புத் துறையில் அறிவிக்கப்பட்ட அன்னிய முதலீட்டாகான தளர்வை சீர்படுத்தும் என தெரிகிற்து.
சிறப்பான முதலீட்டு வளர்ச்சி
கடந்த சில மாதங்களில் அன்னிய முதலீடு சிறப்பாக இருக்கும் நிலையில் இந்தியாவில் கடந்த 1991ஆம் ஆண்டு முதல் இந்திய சந்தையில் சுமார் 196 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications