டெல்லி: ஜூலை மாதத்தில் இந்தியாவின் உற்பத்தி துறையின் வளர்ச்சி 17 மாத உயர்வை தொட்டது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து ஆடர்கள் குவிந்து வருவதாக ஹெச்.எஸ்.பி.சி தெரிவிக்கிறது.
ஹெச்.எஸ்.பி.சி இந்தியாவின் பிஎம்ஐ குறியீட்டின் படி ஜூலை மாதத்தில் இந்திய நிறுவனங்களின் உற்பத்தி சுமார் 53.0 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது, ஜூன் மாதத்தில் 51.5 புள்ளிகளாக இருந்தது குறிப்பிடதக்கது. அந்த வளர்ச்சி சிறந்த வளர்ச்சிக்கான அறிகுறியை தெரிவிக்கிறது. பொதுவாக 50 புள்ளிகள் குறைவாக இருந்தால் குறைவான வளர்ச்சி என மதிப்பிடப்படும்.
9 மாத தொடர் உயர்வு
இந்திய உற்பத்தி துறையில் அதிகப்படியான ஆடர்கள் குவிந்து வருவதால் கடந்த 9 மாதமாக இத்துறை சிறப்பான வளர்ச்சியை சந்தித்து வருவதாக எச்.எஸ்.பி.சி தெரிவிக்கிறது. இதனால் இந்திய உற்பத்தி நிறுவனங்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.
ஆடர்கள்
உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து தொடர்ந்து ஆடர்கள் குவித்ததன் மூலம் 17 மாத உயர்வை எட்டியது.
விலை உயர்வு
மேலும் உற்பத்தி துறையின் உள்ளிட்டு செலவும், விநியோக செலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் உற்பத்தி துறையின் வளர்ச்சி மிகவும் பாதிப்படைந்துள்ளது எனவும் ஹெச்.எஸ்.பி.சி இந்தியா தெரிவித்துள்ளது.
பணவீக்கம்
நாட்டின் சில்லறை பணவீக்கம் ஜூன் மாதம் 7.31 சதவீதம் என்ற அளவில் உள்ளது, அதேபோல் மொத்த விலை பணவீக்கம் 5.43 சதவீதமாக உள்ளது. ஆகஸ்ட 5ஆம் தேதி வெளிவரும் ரிசர்வ் வங்கியின் கொள்கை ஆய்வு பணவீக்கத்தை குறைக்கு சாத்தியக்கூறுகள் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications