இலவச இண்டர்நெட் கொடுத்து ஆள் சேர்க்கும் பேஸ்புக்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சான் பிரான்சிஸ்கோ: உலகில் இன்டர்நெட் வசதியை கண்டிராத சுமார் 425 கோடி மக்களுக்கு அவற்றை கிடைக்கச் செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக ஜாம்பியா நாட்டில் உள்ள பேஸ்புக் உபயோகிப்பாளர்களுக்கு சமூக வலைத்தளங்கள் மற்றும் பிற சில முக்கிய வலைத்தளங்களை உபயோகிக்க இலவச இன்டர்நெட் வசதியை தரும் ஒரு ஆப்-ஐ அறிமுகம் செய்துள்ளது.

 

"internet.org எனப்படும் இந்த மென்பொருள் முதலில் ஜாம்பியாவில் உள்ள ஏர்டெல் உபயோகிப்பாளர்களுக்கு தரப்படுவதோடு, நாங்கள் இதனை தொடர்ந்து முன்னேற்றுவதற்கான முயற்சிகளை எடுத்து உலகின் பிற நாடுகளுக்கும் இதை விரிவுபடுத்த உள்ளோம்" என பேஸ்புக் நிறுவன மென்பொருள் துறை மேலாளர் கை ரோஷன் தன்னுடைய ப்ளாக்கில் செய்தி வெளியிட்டிருந்தார்.

முக்கிய தளங்கள்

முக்கிய தளங்கள்

அவர் மேலும் குறிப்பிடுகையில், அக்கு வெதர், கூகுள் சர்ச், கோஜாம்பியா ஜாப்ஸ், விக்கிபீடியா, WRAPP (ஒரு பெண்கள் உரிமை மென்பொருள்) மற்றும் பேஸ்புக் ஆகியவற்றை உள்ளடக்கிய 13 வலை தளங்களுக்கு இலவச இணையதள இணைப்பைத் தரும் எனத் தெரிவித்தார்.

 ஏர்டெல்

ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனம் இந்த இலவச இணைப்பிற்கான செலவை தனது வாடிக்கையாளர்கள் தாங்கள் உபயோகிக்கும் திட்டங்களை மேம்படுத்த முன்வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் ஏற்கவுள்ளதாக ரோசென் தெரிவித்தார்.

பேஸ்புக்

பேஸ்புக்

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகெர்பெர்க் இந்த திட்டத்தினை கடந்த கோடை காலத்தில் அறிவித்திருந்தார். கடந்த வாரம் இதே போன்ற திட்டங்களை, பில்லிப்பைன்ஸ், பராகுவே மற்றும் தான்சானியா நாடுகளில் அறிவித்ததன் மூலம் 30 லட்சம் வாடிக்கையாளர்கள் சேர்ந்ததாகத் தெரிவித்தார்.

முன்னேற்றம்
 

முன்னேற்றம்

"internet.org மற்றும் பேஸ்புக்-ன் குறிக்கோளில் இது ஒரு மிகப்பெரிய முன்னேற்றம்" என்று ஜாம்பியா நாட்டில் துவக்கிய திட்டத்தின் பொது ஜூகர்பெர்க் தெரிவித்ததுடன் "இலவச அடிப்படைத் திட்டங்களை பல நாடுகளில் கொண்டுவர நாங்கள் ஆர்வமுடன் உள்ளோம்" எனவும் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook introduces free internet in Zambia

Facebook launched an app on Thursday that will give users in Zambia free access to its social network as well as other critical internet sites, in a boost to its plan to to extend web access to the 4.25 billion people who lack it.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X