மோசடி திட்டங்களை தடுக்க செபிக்கு கூடுதல் அதிகாரம்!! மத்திய அரசு

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: 'செபி' என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு, மோசடியான முதலீட்டு திட்டங்களை தடுப்பதற்காக அதிக அதிகாரத்தை தரும் மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

இதன் மூலம் விசாரணையிலிருக்கும் நிறுவனங்களின் ஆவணங்களை கேட்கவும் மற்றும் இந்த வழக்குகளை துரிதமாக விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவும் செபி-யினால் முடியும்.

(Read: Shriram Transport Fixed Deposits: 5 reasons to invest)

செபி- காங்கிரஸ்

செபி- காங்கிரஸ்

இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி உருவாக்கப்பட்ட மிகவும் அவசியமான மசோதாக்களில் இதுவும் ஒன்று. முந்தைய ஐக்கிய முன்னணி அரசின் காலத்தில் இவ்வாறான நிதி சரிவை ஏற்படுத்தும் திட்டங்களை செபி கையாளுவதற்கான ஒரு ஆணையை கொண்டுவர மூன்று முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனினும், பாராளுமன்றத்தில் இதை நிறைவேற்ற இயலவில்லை.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

2014-ம் ஆண்டின் பங்கு வர்த்தக சட்டத்திருத்தம், இந்திய பங்கு மற்றும் வர்த்தக நிறுவனமான செபி-க்கு தகவல்களை கேட்டுப் பெறும் அதிகாரத்தை கொடுக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. இந்த மசோதாவை மத்திய நிதியமைச்சகத்தின் இணை அமைச்சரான நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்தார்.

செபிக்கு கூடுதல் அதிகாரம் தேவை...
 

செபிக்கு கூடுதல் அதிகாரம் தேவை...

'முதலீட்டாளர்களின் நோக்கத்தை பாதுகாப்பதும் மற்றும் பங்கு சந்தையின் ஒழுங்கான வளர்ச்சிக்கும், வாரியத்தின் அதிகாரத்தை அதிகப்படுத்த வேண்டியது அவசியமாக இருப்பது' ஆகியவை தான் இந்த மசோதாவின் குறிக்கோள்களாகவும் மற்றும் காரணங்களாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

முறைகேடான முதலீட்டு திட்டம்

முறைகேடான முதலீட்டு திட்டம்

இந்த மசோதாவை சட்டமாக நிறைவேற்றி விட்டால், 'பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து மட்டுமல்லாமல், பங்கு சந்தையுடன் நேரடித் தொடர்பு இல்லாதவர்களிடம் இருந்தும்' தகவல்களைக் கேட்கும் அதிகாரத்தை செபி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சட்ட விரோதமான முதலீட்டுத் திட்டங்களை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரங்களையும் கூடுதலாகப் பெறும்.

சிறப்பு நீதிமன்றங்கள்

சிறப்பு நீதிமன்றங்கள்

'மேலும், பங்கு வர்த்தக சட்டத்தின் கீழ் நிலுவையில் குவிந்து கிடக்கும் பெருமளவிலான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து விரைவாக விசாரிக்க வேண்டியதும் அவசியம்' என்று அரசு தரப்பு கூறுகிறது.

கூட்டு மூலதன திட்டம்

கூட்டு மூலதன திட்டம்

பதிவு செய்யப்படாத திட்டங்கள் எதிலும் சுமார் 100 கோடி ரூபாய் அளவாகவோ அல்லது அதற்கும் மேலாகவோ மூலதன நிதி இருந்தால் அதனை கூட்டு மூலதன திட்டமாக கருத வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

New Bill in Lok Sabha to give SEBI more teeth

A Bill to further empower the Securities and Exchange Board of India (SEBI) to check fraudulent investment schemes, to call for documents on entities under probe and provide for constitution of special courts to expedite the cases was introduced in the Lok Sabha.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X