சான் பிரான்சிஸ்கோ: மொபைல் உலகின் ஜாம்பவானாகளான ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கும் இடையேயான காப்புரிமை முறைகேடு வழக்குகளை முடிவுக்கும் கொண்டு வர இரு நிறுவனங்களும் முன்வந்துள்ளது. இதனால் இவ்வழக்கின் விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் கடந்த 2011ஆம் ஆண்டு சாங்சங் நிறுவனத்தின் மீது முறைகேடாக தங்களது தயாரிப்புகளை பயன்படுத்தியதாக வழக்கு பதிவு செய்தது. ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் ஆசிய, வடக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கண்டங்களில் சுமார் 13 நாடுகளின் நிதிமன்றங்களில் இது தொடர்பான வழக்ககுகளை தொடுத்துள்ளது.
(Read: Shriram Transport Fixed Deposits: 5 reasons to invest)

அப்பிள் நிறுவனத்தின்எ தயாரிப்புகளை, சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி மாடல் போன்களில் முறையற்ற வகையில் பயன்படுத்தி உலக நாடுகளில் விற்பனை செய்ததாகவும், இதனால் தனது வர்த்தகத்தில் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு நஷ்டஈடு சாம்சங் நிறுவனத்தின் மீது ஆப்பிள் நிறுவனம் வழக்கு பதிவு செய்துள்ளது.
அமெரிக்க நிதிமன்றத்தின் இது தொடர்பாக வழக்கு விசாரனை நடந்து வரும் நிலையில், அமெரிக்காவை தவிர பிற நாடுகளில் உள்ள வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர இரு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications