3 வருடத்திற்கு பிறகு 10% சம்பள உயர்வு அளித்த ஸ்பைஸ்ஜெட்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் மலிவு விலை விமான நிறுவனங்களில் ஒன்றான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், தனது விமான பைலட் மற்றும் விமான பணியாளர்களுக்கு 3 வருடத்திற்கு பிறகு சம்பளத்தை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் நஷ்டத்தை சந்தித்து வரும் இந்நிறுவனத்தின் மீது முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிறுவனத்தின் பணியாளர்கள் மற்றும் பைலெட்களுக்கு இவ்வருடம் அவர்களது சம்பளத்தில் சுமார் 10 சதவீதத்தை ஊதிய உயர்வை அளித்துள்ளது. கடந்த சில வருடங்களாக இந்நிறுவனம் நஷ்டத்தில் செயல்பட்டதாலும், நிறுவனத்தை மேம்படுத்தும் காரணங்களுக்காகவும், பணியாளர்களுக்கு ஊதிய உயர்வை இந்நிறுவனம் அளிக்க மறுத்து வந்தது. எனவே கடந்த நிதியாண்டில் 1000 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தாலும் பணியாளர்களுக்கு இவ்வருடம் ஊதிய உயர்வு அளித்துள்ளது.

 

(Read: 7 reasons why the SBI Magnum Equity Fund is a great buying opportunity)

ஊதிய உயர்வு

ஊதிய உயர்வு

கடந்த 3 வருடமான ஊதிய உயர்வு அளிக்கப்படாததால் இத்துறையின் பிற நிறுவனங்களுக்கு மத்தியில் ஸ்பைஸ்ஜெட் நிறுனத்தின் மதிப்பு குறைவாக மதிப்பீடப்பட்டது. குறிப்பாக பைலட்களின் ஊதியத்தில் பிற நிறுவனங்களுக்கும் இந்நிறுவனத்திற்கு அதிகப்படியான வித்தியாசம் இருந்தது. ஊதிய உயர்விற்கு பிறகு சந்தையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் தற்போது இணையாக மதிப்பீடப்படுகிறது.

வரிச் செலுத்துதல்

வரிச் செலுத்துதல்

ஊதிய உயர்விற்கு பிறகு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் கபூர் தனது பணியாளர்களுக்கு அனுப்பிய ஈமெயிலில் பணியாளர்களுக்கும் விரைவில் வரி செலுத்தும் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும் என அவர் தெரிவித்து இருந்தார். இதனால் பணியாளர்கள் கடந்த சில வருடங்களாக வரி செலுத்த தவறவிட்டார்களா என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் நிறுவனத்தின் மாத ஊதிய தக்க சமையத்தில் வழங்கப்படுகிறது.

டிக்கெட் விற்பனை
 

டிக்கெட் விற்பனை

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அதிரடி சலுகைகளால் இந்நிறுவனத்தின் டிக்கெட் விற்பனை மிகவும் சிறப்பாக அமைந்தது. இதன் மூலம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வாடிக்கையாளரின் சேவையை கருத்தில் கொண்டு விமான குத்தகைகார்களுக்கும், விநியோகிஸ்தர்களுக்கும் நேரம் தவறாமல் கட்டணத்தை செலுத்தி வந்தது.

வளர்ச்சி

வளர்ச்சி

கடந்த ஜூன் மாதத்தில் இந்நிறுவனத்தின் சந்தையில் 81.4 சதவீதத்தை பெற்றது, இதன் மூலம் இத்துறை முன்னோடியான இண்டிகோ நிறுவனத்தை ஸ்பைஸ்ஜெட் வென்று முன்னிலை பெற்றது. மேலும் இம்மாதத்தில் இத்துறை 19 சதவீதம் வளர்ச்சியை பெற்றது குறிப்பிடதக்கது.

 நஷ்டம்

நஷ்டம்

நடப்பு நிதியாண்டில் இந்நிறுவனத்திற்கு அதிகப்படியான வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் பெற்றது. மேலும் இந்நிறுவனம் கடந்த நிதியாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 1,000 கோடி ரூபாய் அளவு நஷ்டத்தை சந்தித்ததால் இந்நிறுவனம் 5 முதல் 6 போயிங் 737 விமானங்களை குத்தகைகார்களுக்கு திரும்ப கொடுத்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Signs of turnaround: SpiceJet goes for a 10% pay hike after 3 years

Low-fare carrier SpiceJet has recently increased salaries of pilots and crew after three years, two people in the know said, a move which may give investors hope that all is not bad with the loss-making carrier.
Story first published: Friday, August 8, 2014, 17:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more