மந்தமாக செயல்படும் வருமான வரி துறை!! ரூ.48,000 கோடி வரிப் பணம் நிலுவை..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பாராளுமன்ற விவாதத்தின் போது வரி செலுத்துவோருக்கு சேர வேண்டிய 2012-13 மற்றும் 2013-14 ஆம் ஆண்டிற்கான வரிப்பணம் ரூபாய் ரூ.48,069 கோடி அரசு நிலுவையில் வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது (க்க்கும்... வாங்கும்போது மட்டும் கரெக்டா வாங்குங்க..).

 

"ஜுலை 7 ஆம் தேதி நிலவரப்படி, அரசு பெற்றுள்ள 2012-13 மற்றும் 2013-14 ஆம் ஆண்டுகளுக்கான கூடுதல் வரியை, அதாவது சுமார் 48,069 கோடி ரூபாய் அளவிலான வரி செலுத்துவோருக்குச் சேர வேண்டிய தொகை நிலுவையில் உள்ளது" என மத்திய நிதி இணையமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மாநிலங்களவைக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

மந்தமாக செயல்படும் வருமான வரி துறை!! ரூ.48,000 கோடி வரிப் பணம் நிலுவை..

இந்த தாமதம் ஏன் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, வரி விவரங்களை ஆராய்ந்த பின்னரே திருப்பிச் செலுத்தவேண்டிய தொகையை உறுதி செய்யமுடியும் என்றும், இது ஒரு தொடர்ச்சியான மற்றும் விவரங்கள் பெறப்பட்ட நிதியாண்டிலிருந்து ஒரு ஆண்டுவரை நீடிக்கக் கூடிய பணி என்றும் அவர் தெரிவித்தார். எனவே 2013-14 ஆம் ஆண்டிற்கான வரி விவரங்கள் ஆய்வு அடுத்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை நடக்கும்.

வரி விவரங்களை சரிபார்த்தல், வரி செலுத்துவோர் விவரங்களைத் தருவதில் செய்யும் தாமதம், செலுத்திய அல்லது பெறப்பட்ட வரிவிவரங்கள் சரிவரப் பொருந்தாத பொழுது சரிபார்த்தலில் உள்ள சவால்கள் ஆகியன தாமதத்திற்கான பிற காரணங்களாகும்.

தவறான முகவரி, தவறான வங்கித்தகவல்கள், தவறான பான் எண் மற்றும் பான் எண்ணை ஒரு எல்லையிலிருந்து மற்ற எல்லைக்கு மாற்றுதலில் உள்ள சிக்கல்கள் ஆகியவையும் வரி விவரங்களைச் செலுத்துதலில் உள்ள சவால்களாகும். இத்தகைய சிக்கல்களை சமாளித்து வருகிறோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Over Rs 48,000-cr tax refund claims pending

The Government has to pay as much as Rs 48,069 crore in refund claims for 2012-13 and 2013-14, Parliament was informed today.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X