A Oneindia Venture

மிகப்பெரிய நிதி நெருக்கடியை சந்திக்க தயாராக வேண்டும்!! ரகுராம் ராஜன் எச்சரிக்கை..

லண்டன்: ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் உலக வர்த்தக சந்தைகள் பலவீனமான நிலையில் உள்ளதாகவும், எந்த ஒரு தருணத்திலும் பாதாளத்தில் விழும் என்றும் ராஜன் எச்சரித்துள்ளார். எனவே வளரும் நாடுகள் இந்த பொருளாதார சிக்கலில் சிக்குவதற்கு முன்பாக ஆபத்து நிறைந்த சொத்துகளை காப்பாற்றவும், நாட்டின் பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் நிதியியல் கொள்கையை மாற்றியமைக்க வலியுறுத்திகிறார்.

தற்போது உள்ள நிலையற்ற பொருளாதார தன்மையில் விலை நிலவரம் தாறுமாறாக உயர அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இதனால் வளரும் நாடுகள் அதிகப்படியான பாதிப்புக்குள்ளாகும்.

சென்ட்ரல் பாங்கிங் ஜர்னல்

சென்ட்ரல் பாங்கிங் ஜர்னல்

லண்டனை சேர்ந்த சென்ட்ரல் பாங்கிங் ஜர்னல் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "துரதிருஷ்டவசமாக, பெரு நிதியியல் வல்லுனர்களுக்கு பெரும் நிதி நெருக்கடி பற்றி சரியான பாடம் கிடைக்கவில்லை, இதனால் பல வல்லுனர்கள் இதனை கணிக்க முடியாத அளவில் இருக்கின்றனர். இன்னும் அவர்கள் இத்தகைய நெருக்கடியை சமாளிக்க தயாராகவில்லை என்றால் அதன் ஆபத்து அவர்களை கண்டிப்பாக பெரிய அளவில் பாதிக்கும். மேலும் இத்த நெருக்கடிக்கு எந்த விதமான அறிகுறியும் இருக்காது." என ரகுராம் தெரிவித்தார்.

ராஜனின் கணிப்புகள்

ராஜனின் கணிப்புகள்

ராஜன் உலக வங்கியில் பணியாற்றிக் கொண்டு இருக்கும்போது 2005ஆம் ஆண்டு நாட்டை புரட்டி போட்ட நிதி நெருக்கடியை பற்றி 2004ஆம் ஆண்டு அன்றே கணித்திருந்தார். அதேபோல் இப்போதும் அவர் உலக சந்தைக்கும் ஒரு எச்சரிக்கை மணி அடித்துள்ளார். (உசார் ஐயா.. உசாரு....)

1930ஆம் ஆண்டின் நிதி நெருக்கடி

1930ஆம் ஆண்டின் நிதி நெருக்கடி

சர்வதேச நாணய நிதியம் தற்போது உள்ள உலக பொருளாதாரத்தை 1930ஆம் ஆண்டு உலக பொருளாதாரத்தோடு ஒப்பிடுகிறது.

சந்திக்க தயாராக இருக்க வேண்டும்

சந்திக்க தயாராக இருக்க வேண்டும்

மேலும் இன்றைய உலக பொருளாதாரம் இருக்கும் நிலையில் " விலை உயர்வை தாக்குபிடிக்க முடியாத நிலையில் உலகம் மிகப்பெரிய நிதி நெருக்கடியை சந்திக்கும்." என் ரகுராம் ராஜன் உறுதியாக தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+