மும்பை: 2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் பொது துறை வங்கியான ஸ்டேட் வங்கி, மொத்த லாபத்தில் 3.3 சதவீத வளர்ச்சியை சந்தித்து 3,349 கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளது. கடந்த 6 காலாண்டில் லாபத்தில் அதிகப்படியான வளர்ச்சியை சந்தித்து இந்த முறையே. இக்காலாண்டில் இவ்வங்கியின் வட்டி வருமானம் சுமார் 15.1 சதவீதம் உயர்ந்து 13,252 கோடி ரூபாய் என்ற அளவை எட்டியுள்ளது.
இந்திய வங்கி அமைப்பில் மிகப்பெரிய அளவில் வங்கி வாடிக்கையாளர் மற்றும் வங்கி கிளை கொண்டு இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது.
மொத்த வருமானம்
இக்காலாண்டில் ஸ்டேட் வங்கியின் மொத்த வருமானம் சுமார் 15 சதவீதம் உயர்ந்து 36.487 கோடி ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது. மேலும் இவ்வங்கியின் பிற துறைகளில் வட்டி வருமான சரசரியாக சுமார் 15 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது குறிப்பிடதக்கது.
வட்டி விகிதம்
உள்நாட்டு மொத்த வட்டி வகிதம் (NIM) 10 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 3.54 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேபோல் பேசல் 3 திட்டத்தின் படி மூலதன தகுதி வீதம் 12.33 சதவீதமாக உள்ளது.
வங்கி செலவீனம்
மேலும் 2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இவ்வங்கியின் மொத்த செலவீனம் 3.34 சதவீதம் உயர்ந்து ரூ.8.717 கோடியாக உள்ளது, இதே காலகட்டத்தில் செயற்பாட்டுக்கான லாபம் 16.37 சதவீதம் உயர்ந்து 8,788 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
செயற்படா சொத்துக்கள்
பொதுவாக இந்திய வங்கி அமைப்பில் இருக்கும் மிகப்பெரிய தலைவலி என்றால் அது வங்கிகளின் செயற்படா சொத்துக்கள் தான். இந்த வகையில் ஸ்டேட் வங்கியின் செயற்படா சொத்துக்கள் 66 அடிப்படை புள்ளிகள் குறைந்து 4.9 சதவீதமாக உள்ளது.
வைப்பு நிதிகள்
இவ்வங்கியின் வைப்பு நிதி 12.85 சதவீதம் உயர்ந்து 1,418,915 கோடி ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications