மும்பை: தென்இந்தியாவின் மிகப்பெரிய தொலைக்காட்சி மற்றும் ஒளிப்பரப்பு நிறுவனமான சன் டிவி நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வெறும் 1 சதவீத வளர்ச்சியை மட்டுமே சந்தித்துள்ளது. இதன் எதிரொலியாக பங்கு சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் இன்று ஒரே நாளில் 5 சதவீதம் சரிந்து 396 ரூபாய் என்ற நிலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
மேலும் இந்நிறுவனத்தின் வளர்ச்சி, கணிப்புகளை விட குறைந்துள்ளதால் ஜூன் மாதம் முடிவடைந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்தம் லாபம் 166 கோடி ருபாய் மட்டுமே பெற்றது. இந்நிறுவனம் ஐபிஎல் போட்டியில் கலந்து கொண்டதன் விளைவாக, சன்ரைஸர்ஸ் ஹைதெராபாத் அணியை நடத்துவதற்கான செலவில் அதிகப்படியான நஷ்டத்தை சந்தித்துள்ளது கவனத்திற்கூரியது.
(READ: 6 extra financial benefits that senior citizens receive in India)
கேபிள் டிவி
சன் டிவி நெட்வொர்க் ஒளிபரப்பு மற்றும் கேபிள் டிவி வணிகத்தில் உள்ளது. இப்பிரிவில் இந்நிறுவனம் இதே காலாண்டில் 164 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது. மேலும் மொத்த வருமானத்தில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் 5 சதவீத வளர்ச்சியை சந்தித்து 634 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
ஐபிஎல் வருவாய்
கலாநிதி மாறன் தலைமை வகிக்கும் இந்நிறுவனம் தொலைக்காட்சி, ஒளிப்பரப்பு போன்ற துறைகளில் மட்டும் அல்லாமல் கடந்த 7 வருடமாக இந்தியாவை மட்டும் அல்லாமல் உலக நாடுகளை கலக்கி வரும் ஐபிஎல் போட்டிகளில் இந்நிறுவனம் கலந்து கொண்டு வருகிறது. இந்த 7 போட்டிகளில் கடந்த 2 வருடமாக சன் நெட்வொர்க் தலைமையில் சன்ரைஸர்ஸ் ஹைதெராபாத் அணி ஐபிஎல் போட்டியில் கலந்து கொண்டு வருகிறது. இதன் மூலம் இந்நிறுவனத்திற்கு வருமானம் 368 கோடி கிடைத்தாலும், மொத்தத்தில் நஷ்டத்தை மட்டுமே இந்நிறுவனம் சந்தித்துள்ளது.
2ஜி வழக்கு
இந்நிறுவனம் 2ஜி ஊழல் வழக்கில் முக்கிய பொறுப்பு வகுக்கிறது. மேலும் இந்நிறுவனத்தின் உரிமையாளரான கலாநிதிமாறன் மற்றும் அவது தம்பி தயாநிதி மாறன் அவர்களும் இந்த ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவர்.
பங்கு சந்தை
இன்றைய வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் 412 ரூபாய் என்ற நிலையில் இருந்த பங்குகள் ஒரே நாளில் 396 ரூபாய் வரை சரிந்துள்ளது. இன்று மட்டும் மும்பை பங்கு சந்தை மட்டும் நிஃப்டியில் சுமார் 458,466 பங்குகள் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications