ஹைதராபாத்: குளிர்பான நிறுவனமான கோகோ கோலா, இந்தியா மற்றும் ஆசியவில் தனது விநியோகம் மற்றும் தயாரிப்புகளை மேம்படுத்த, தெலங்கானாவில் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் மிகப்பெரிய தொழிற்சாலையை உருவாக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு இம்மாநில அரசு முழு உறுதுணையாக உள்ளது.
தொழிற்துறை பூங்காக்கள் மற்றும் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் ஆந்திர மாநிலமும், புதிதாய் பூத்திருக்கும் தெலங்கானா மாநிலமும் போட்டிப்போட்டு கொண்டு நிறுவனங்களை அனுகி வண்ணம் உள்ளது. இதில் தெலங்கானா முக்கிய வர்த்தக தளங்களை பெற்றுள்ளதால் அனைத்து நிறுவனங்களும் தெலங்கானா பக்கம் செல்கிறது, இதனால் ஆந்திர மாநிலம் சோகத்தில் உள்ளது.
(READ: Indian Bank Swarna Nidhi Deposit!!)
சந்திரசேகர் ராவ்
கோகோ கோலா நிறுவனத்தின் துணை தலைவர் இரியல் பினான் மற்றும் இந்திய கிளையின் தலைவரான டி.கிருஷ்னகுமார் ஆகியோர் திங்கட் கிழமை கலையில் புதிய தொழிற்சாலை அமைப்பது குறித்து தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவுடன் பேச்சு வார்த்தையில் நடத்தினர்.
சந்திரபாபு நாயுடு
கடந்த வாரம் இறுதியில், இதே குழு அந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்களை சந்தித்தது. இந்த சந்திப்பிற்கு பின்னர் சந்திரபாபு நாயுடு தனது டிவிட்டர் பக்கத்தில் "கோகோ கோலா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை இனிதே முடிந்தது, ஆந்திராவில் இந்நிறுவனத்தின் 2 பாட்டிலிங் தொழிற்சாலையை அமைக்க நிலத்தை தேடும் பணி துவங்கியுள்ளது" என தெரவித்திருந்தார்.
இங்கே தான் "டிவிஸ்ட்"
கோகோ கோலா நிறுவன அதிகாரிகள் சந்திரசேகர் ராவ் அவர்களை சந்தித்த பிறகு தெலங்கானாவில் எங்கள் நிறுவனத்திற்கு சந்தைப்படுத்தும் சாத்தியகூறு அதிகளவில் தெரிகிறது. மேலும் இங்கு எங்களது மிகப்பெரிய தொழிற்சாலையை அமைக்க நாங்கள் தயார் என செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
மாநில அரசின் உதவி
தொழிற்சாலை அமைக்கும் பணியில் மாநில அரசின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும் என தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது. மேலும் இத்தொழிற்சாலைக்கான நிலத்தை கூடிய விரைவில் கண்டுபிடிப்பதாக தெலங்கானா மாநில அரசு தெரிவித்துள்ளது.
அதானி
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நெருங்கிய நன்பரான அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி திங்கட் கிழமை தலைமையகத்தில் சந்திரசேகர் ராவ் அவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் அதானி, தனது மின்சார உற்பத்தி திட்டத்தை குறித்து ராவ் அழர்களுக்கும் விரிவுப்படுத்தினார். மேலும் தெலுங்கானவில் தொழிற்சாலை அமைப்பதால் கிடைக்ககூடிய நன்மைகளை ராவ் பட்டியல் போடு அடுக்கினார். விரைவில் அதானி குழுமத்தின் மின் உற்பத்தி நிறுவனம் தெலுங்கானாவில் அமையும்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications