"ஜெட் கனக்ட்" நிறுவனத்தை இழுத்து மூடும் நரேஷ் கோயல்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மலிவு விலை விமான போக்குவரத்து சேவையை வழங்கும் நிறுவனமான "ஜெட் கனக்ட்" நிறுவனத்தை வாடிக்கையாளர்களை பெரிதும் ஈர்க்காத காரணத்தினால் இழுத்து மூட திட்டமிட்டுள்ளது. ஏர்ஏசியா மற்றும் விஸ்ட்ரா போன்ற மலிவு விலை விமான நிறுவனங்கள் இந்திய சந்தையில் குவிந்துள்ளதால், போட்டியை சமாளிக்க முடியாமல் கடந்த 6 காலாண்டுகளாக ஜெட் கனக்ட் திணறி வருகிறது.

 

நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை போல் இந்நிறுவனமும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதனால் இந்நிறுவனம் பொருளாதார ரிதியில் அதிகப்படியான பாதிப்பை சந்தித்துள்ளது. ஏன் இந்த நிலை என இந்நிறுவனம் சில காரணங்களை சொல்கிறது வாங்க அது என்னவென்று பார்போம்....

(READ: Indian Bank Swarna Nidhi Deposit!!)

ஜெட் ஏர்வேஸ் - ஜெட் கனக்ட்

ஜெட் ஏர்வேஸ் - ஜெட் கனக்ட்

ஒரே நிறுவன பெயரில் இரு நிறுவனங்கள் இருப்பதால் இந்திய மக்கள் மத்தியில் ஜெட் கனக்ட் நிறுவனம் அதிகளவில் பிரபலம் ஆகவில்லை. இத்தகைய பெயர்களால் மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவிக்கிறது.

ஜெட் கனக்ட் நிறுவனத்திற்கு

ஜெட் கனக்ட் நிறுவனத்திற்கு "டாட்"

ஜெட் கனக்ட் நிறுவனத்தின் போயிங் விமானகளை 12 பிஸ்னஸ் கிளாஸ் மற்றும் 156 எக்னாமிக் கிளாஸ் இருக்கைகள் கொண்டாதாக மாற்றப்படும். இதன் மூலம் அனைத்து தரப்பு பயணிகளுக்கும் சிறந்த மற்றும் நிலையான சேவையை அளிக்க முடிவு செய்துள்ளது. மேலும் இந்த விமானங்களை இனி ஜெட் ஏர்வேஸ் என்ற பெயரிலேயே பறக்கவிடவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

நாங்ளும் கூட்டணி வைப்போம்....
 

நாங்ளும் கூட்டணி வைப்போம்....

ஜெட் கனக்ட் நிறுவனத்தின் விமானங்களை ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துடன் இணைப்பதும் மட்டும் அல்லாமல், வாடிக்கையாளர் எண்ணிக்கை மற்றும் உலகளாவிய விமான சேவை அளிக்க ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் எதிஹாட் நிறுவனத்துடன் இணைய உள்ளதாகவும் இந்நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல் தெரிவித்தார்.

 270 விமானகள்

270 விமானகள்

இந்த புதிய இணைப்பின் மூலம் ஐெட் ஏர்வேஸ் முழுவீச்சில் செயல்படும். இந்நிறுவனம் சுமார் 270 விமானங்களை இந்தியாவில் இயக்கி வருகிறது. எதிஹாட் நிறுவனத்துடன் இணைந்தன் மூலம் ஜெட் கனக்ட் சேவையின் மூலம் பிற நாடுகளுக்கக பறக்கவும் வாயிக்கையாளர் பகிர்தலும் செய்ய முடியுது. மேலும் இரு நிறுவனங்களுக்கும் மத்தியில் உள்ள செயல்திட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்தப்பட்டால் அடுத்த 2 -3 வருடங்களில் ஜெட் ஏர்வேஸ் இந்தியாவின் மிக முக்கிய விமான நிறுவனமாக திகழும்.

ஜெட் லைட்

ஜெட் லைட்

மேலும் இந்நிறுவனத்தின் மற்றொரு நஷ்டத்தில் செயல்படும் நிறுவனமான ஜெட்லைட் நிறுவனத்தை விற்கும் முடிவில் இல்லை எனவும், ஜெட் லைட் நிறுவனத்தையும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் நரேஷ் கோயல் தெரிவித்தார்.

ஜெட் கனக்ட்

ஜெட் கனக்ட்

5 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்து சூடுபிக்கும் நேரத்தில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மலிவு விலை விமான சேவையை வழங்க ஜெட் கனக்ட் என்னும் நிறுவனத்தை துவங்கியது. துவக்கத்தில் இந்தியா விமான பயண வாடிக்கையாளர்களில் அதிக எண்ணிக்கை கொண்ட ஜெட்கனக்ட் பின்னாளில் போட்டியின் காரணமாக இந்நிறுவனத்தின் கஸ்டமர் குறைய துவங்கியது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jet to scrap low-cost service by year-end

Jet Airways has decided to scrap its low-cost brand, Jet Konnect, launched five years ago, to focus on its full-service operation, as it faces competition from established airlines and start-ups like AirAsia and Vistara.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X