டெல்லி: மத்திய அரசின் நிதி செலவிடுதலில் உள்ள குறைகளைக் களையவும், புத்துயிரூட்டவும் அதனை சரியான முறையில் உபயோகிக்கவும், இத்துறைக்குறித்து தேவையான ஆலோசனைகளை வழங்க அரசு செலவினக்குழுத் தலைவராக, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பிமல் ஜலனை நியமனம் செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.
மூத்த அரசு அதிகாரிகள் இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த தகவலில், இந்த முடிவு உயர்மட்டத்தில் எடுக்கப்பட்டிருப்பதாகவும் இன்னும் இரண்டொரு நாட்களில் இதற்கான ஆணையை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அருண் ஜேட்லி
நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த மாதம் அறிவித்த பட்ஜெட்டின் போது புதிய செலவின மறுசீரமைப்பு ஆணையம் ஒன்றை அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து சில வாரங்களுக்குள் வெளியாகியுள்ள இந்த செய்தி, அரசு நிதி நிலைமைகளை நன்கு நிர்வகிக்க முனைப்பாக இருப்பதையே காட்டுகிறது.
எதற்கு புதிய ஆணையம்??
அதிகமான செலவுகள், சரிவர பயன்படுத்தப்படாத அதிக அளவு மானியங்கள், ஏழ்மை ஒழிப்புக்குத் தரப்படும் குறைந்த அளவு முக்கியத்துவம் மற்றும் கீழ்மட்டத்திலுள்ள அதிக அளவு அரசுப் பணியாளர்கள் என பல நிதித் தேவை அதிகம் உள்ள காரணங்களால், அரசு சிரமத்திற்குள்ளாகியுள்ளது.
பொருளாதார நிலைமை..
தற்போது நிலவி வரும் இக்கட்டான பொருளாதார சூழலில் வருவாய் ஈட்டுதலில் உள்ள குறைபாடுகள் காரணமாக, அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட புதிய சொத்துக்களை உருவாக்குவதை குறைப்பதைத் தவிர வேறு வழியில்லை.
உணவு மற்றும் எரிபொருள் மானியம்
நிதியமைச்சர் ஜேட்லி கூறுகையில், "இந்திய பொருளாதாரம் தற்போது இருக்கும் நிலையில் ஏழை எளியோரை பாதிக்காத வண்ணம் உணவு மற்றும் எரிபொருள் ஆகியவற்றிர்கான மானியங்களில் சீரமைக்க வாயிபிருப்பதாகவும், இந்த ஆணையம் நடப்பாண்டு இறுதிக்குள் இது தொடர்பான ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கும்" என்றும் தெரிவித்தார்.
சவால்கள்
"செலவுகளை நிர்வகித்தலும் அரசின் வருவாய் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைப்பதுடன் ஏழை எளியோரின் மானியங்களை பாதிக்காத வண்ணம் செயல்படுதலும் தற்போதுள்ள சவால்கள்" என அவர் தெரிவித்தார். இந்த சவால்களை எதிர்கொள்ள ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பிமல் ஜலன் சரியான தேர்வு எனவும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications