மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான மற்றும் மின் உற்பத்தி நிறுவனமான லான்கோ இன்ப்ராடெக் நிறுவனத்தின் உடுப்பி மின் நிலையத்தை ரூ.6,000 கோடி ரூபாய்க்கு அதானி பவர் நிறுவனத்திற்கு விற்றுள்ளது. அனல் மின் துறையில் நடந்த மிகப்பெரிய ஒப்பந்தங்களில் இது மிகவும் முக்கியமானது.
இந்த உடுப்பி மின் நிலையம் 1,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவிற்கு திறனுடையது. உடுப்பி மின் நிலையத்தை கைபற்றிய அதானி பவர் நிறுவனத்தின் தலைவர் கெளதம் அதானி, பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நன்பர் ஆவார். மேலும் இந்நிறுவனம் தெலங்கானாவில் புதிய மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கும் பணியில், அம்மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஒப்பந்தம்
லான்கோ இன்ப்ராடெக் மற்றும் அதானி பவர் நிறுவனத்திற்கும் இடையே நடந்த இந்த ஒப்பந்தத்தில், நிறுவன கைபற்றுதல் துவக்கத்தில் லான்கோ நிறுவனம் 2000 கோடி ரூபாய் பெற்றும். மீதமுள்ள 4000 கோடி ரூபாய் நீண்ட நாள் கடன் அடிப்படையில் அதானி பவர் நிறுவனம் இந்நிறுவனத்திற்கு செலுத்தும்.
நிறுவன விரிவாக்கம்
மேலும் இந்த மின்நிலையத்தை 1,320 மெகாவாட் மின் உற்பத்தி நிலையமாக மாற்ற ஏற்கனவே லான்கோ நிறுவனம் கர்நாடகா மாநில அரசுடன் ஒப்புதல் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது. அதனால் அதானி குழுமம் இம்மின் நிலையத்தின் மேற்பட்ட விரிவாக்க பணிகளை கவனித்துக்கொள்ளும் எனவும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு இருந்தது.
நிலக்கரி இறக்குமதி
லான்கோவின் உடுப்பி மின்நிலையம் முற்றிலும் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை கொண்டு செயல்படுகிறது. மேலும் இதில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 90 சதவீதம் கர்நாடாக மாநிலத்திற்கும், 10 சதவீதம் பஞ்சாம் மாநிலத்திற்கும் விநியோகம் செய்கிறது. இந்த உற்பத்தி நிலையம் வருடத்திற்கு சுமார் 4 மில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்து உபயோகித்து வருகிறது. இறக்குமதிக்கு மங்களூர் துறைமுகத்தை பயன்படுத்தி வருகிறது.
லான்கோ நிறுவனத்திற்கு என்ன லாபம்???
இந்த ஒப்பந்தத்தின் மூலம் லான்கோ நிறுவனத்தின் அதிகப்படியாக இருக்கும் கடன்களை குறைக்க எதுவாக அமைந்துள்ளது. மேலும் இந்த ஒப்பந்தத்தின் துவக்கத்தில் 2000 கோடி ரூபாய் பணமாக கிடைப்பதால் கடனை உடனடியாக குறைக்கு முடியும் எனவும் லான்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மொத்த கடன்
லான்கோ இன்ப்ராடெக் நிறுவனத்தின் மொத்த கடன் தொகை 36,000 கோடி, இக்கடன் தொகையை குறைக்கவும், வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் வங்கியாளர்களிடம் கடன் மறுசீரமைப்பு குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
அதானி பவர்
ஏப்ரல் 3ஆம் தேதியின் தகவல் படி அதான் நிறுவனம் சுமார் 8,620 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்துவருகிறது. இதனால் இந்நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமாக உருவெடுத்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனம் தென் இந்தியாவில் புதிய உற்பத்தி நிலையங்களை உருவாக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளது.
பங்கு சந்தை
இந்த ஒப்பந்தத்தின் காரணமாக இன்றைய பங்கு சந்தையில் லான்கோ நிறுவனத்தின் பங்குகள் 4.90 சதவீத உயர்வும், அதானி பவர் நிறுவனம் 2.75 சதவீத உயர்வும் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications