டெல்லி: இந்தியாவின் டாப் 5 கோடீஸ்வரர்களின் தனிப்பட்ட சொத்துகளின் மதிப்பு மொத்தமாக 85.5 பில்லியன் டாலர் (ரூ 5,23,897 கோடி) என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி முன்னிலை வகிக்கிறார். இந்த 85.5 பில்லியன் டாலர் இந்தியாவிலுள்ள மற்ற பிற கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பில் சரி பாதி என்று ஒரு புதிய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
சொத்து மதிப்பு குறித்து தொடர்ந்து ஆய்வுகளை செய்து வரும் நிறுவனமான வெல்த் எக்ஸ் -ன் இந்தியாவின் செல்வந்தர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் குறித்த ஆய்வின் படி, 24.4 பில்லியன் டாலர் (ரூ1,49,474 கோடி) சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி நாட்டின் பணக்கார மனிதராக விளங்குகிறார்.
டாப் 5
அம்பானியை தொடர்ந்து எஃகு நிறுவன அதிபர் லக்ஷ்மி மிட்டல்-ம், மருந்து பொருள் தயாரிப்பாளர் சன் பார்மாவின் நிறுவனர் திலீப் சங்வி-ம், ஐடி நிறுவன ஜம்பாவனான விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி -ம், டாட்டா சன்ஸ் -ன் பங்குதாரரான பலோன்ஜி ஷபூர்ஜி மிஸ்ரி-ம் இந்தியாவின் முதல் ஐந்து பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
ஒன் பை டூ...
85.5 பில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ள இந்த ஐந்து பணக்காரர்களின் சொத்துகளின் மதிப்பு, இந்தியாவிலுள்ள மற்ற பணக்காரர்களின் சொத்துக்களின் மதிப்பில் 47.5% ஆகும் என்று வெல்த் எக்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.
முக்கிய துறைகள்
இந்த 5 கோடீஸ்வரர்களும் ஒரு நாட்டின் முக்கிய தொழில் துறைகளாக கருதப்படும் எண்ணெய், எரிவாயு, எஃகு மற்றும் மருந்துப் பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு தங்கள் தொழிலில் வெற்றி பெற்றுள்ளனர் என்று அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கிறது.
ஐபில்...
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் அம்பானி மும்பை இண்டியன்ஸ் என்ற ஐபிஎல் கிரிக்கெட் அணியையும் சொந்தமாக கொண்டுள்ளார். ஐபில் போட்டில் மிகவும் மதிப்புமிக்கதாக கருதப்படும் இந்த அணியின் மதிப்பு 112 மில்லியன் டாலர் என்று அறியப்படுகிறது.
லக்ஷ்மி மிட்டல்
உலகின் மிகப்பெரிய எஃகு உற்பத்தி செய்யும் நிறுவனமான ஆர்சிலார் மிட்டல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான லக்ஷ்மி மிட்டல், 17.2 மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட சொத்துகளை கொண்டு இரண்டாம் இடத்தில் உள்ளார். 64,வயதாகும் லக்ஷ்மி மிட்டல் ஆர்சிலார் எஃகு நிறுவனத்தில் 38% பங்கினையும், குயீன்ஸ்பார்க் ரேஞ்சர் என்ற கால்பந்து கிளபினையும் சொந்தமாக கொண்டுள்ள இவர் அதில் 33% பங்கினையும் கொண்டுள்ளார்.
சன் பார்மா
சன் பார்மா மருந்து பொருள் நிறுவனத்தின் திலீப் சங்கவி 156.3 மில்லியன் டாலர் என்று மதிப்பிடப்படுள்ள சொத்துக்களுடன் மூன்றாமிடத்தில் உள்ளார்.
விப்ரோ
திலீப் சங்கவி அவரை தொடர்ந்து அடுத்த இடத்தில் 14.9 மில்லியன் டாலர் சொத்துக்களுடன் விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி-ம் டாடா சன்ஸ் பங்குதாரரான பலோன்ஜி ஷபூர்ஜி மிஸ்ரி 12.7 மில்லியன் டாலர் சொத்துக்களுடன் அடுத்த இடத்திலும் உள்ளார்.
கிங் ஆஃப் பாலிவுட்
இந்தியாவின் பணக்கார நடிகராக அறியப்படும் ஷாருக்கான்-ன் சொத்து மதிப்பு 600 மில்லியன் டாலர் என்றும், கடந்த நவம்பர் 2013-ல் தனது ஓய்வை அறிவித்த கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர்-ன் சொத்து மதிப்பு குறைந்தது 160 மில்லியன் டாலர் என்ற கூடுதல் தகவலையும் அது தெரிவிக்கிறது.
சேஷியல் சர்வீஸ்..
மேற்கண்ட 5 கோடீஸ்வரர்களும் தங்களது சொத்துகளை மட்டும் பெருக்கி கொள்வதில் மட்டும் அக்கறை கட்டாமல், நாட்டு மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் மனிதநேய தொண்டு நிறுவனங்களை நிறுவி, கல்வி, சுகாதாரம், சுற்றுசூழல் பாதுகாப்பு,சமுதாய மேம்பாடு ஆகியவற்றிக்கு தங்கள் ஆதரவை நல்கி சமூக சேவையிலும் ஈடுபட்டு வருவதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications