டெல்லி: 2013-ம் ஆண்டில் உலகளவில் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யும் நாடுகளில், 1700 மெகாவாட் உற்பத்தி திறனுடன் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது என்று ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.
'2013-ம் ஆண்டில் 16,100 மெகவாட் உற்பத்தி திறனை அதிகரித்து, இந்த பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது சீனா. சீனாவைத் தொடர்ந்து அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் உள்ளன', என்று புதுப்பிக்கத்தக்க சக்தி நிலை பற்றிய உலகளாவிய அறிக்கை 2014 குறிப்பிட்டுள்ளது.
சீனா, அமெரிக்க, பிரேஸில், கனடா
2013-ம் ஆண்டின் முடிவில் சீனா, அமெரிக்க, பிரேஸில், கனடா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஒட்டுமொத்தமாக உள்ள புதுப்பிக்கத்தக்க மின்சக்திக்கான வசதியை உருவாக்கியுள்ள நாடுகளின் வரிசையில் முன்னணியில் உள்ளன என்றும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
செலவு குறைவு.. வளரச்சி அதிகம்..
இந்த அறிக்கையின் படி, கடந்த சில ஆண்டுகளாகவே நிலம் சார்ந்த காற்றாலைகளிலும் மற்றும் குறிப்பாக சோலார் பேனல்களில் மின் உற்பத்திக்கான செலவுகள் வெகுவேகமாக குறைந்து வந்ததால், காற்றாலை மற்றும் சூரிய சக்தி திட்டங்களின் அளவு பொது நிதி உதவியுடன் அதிகரித்திருந்தது.
முதலீடு
காற்றாலை மின்சக்தி துறை மற்றும் உற்பத்தியில் வருடாந்திர முதலீட்டின் அளவைப் பொறுத்த வரையில், சீனா முதலிடத்திலும், ஜெர்மனி, இங்கிலாந்து, இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் அதைத் தொடர்ந்தும் உள்ளன.
35,000 மெகாவாட் உற்பத்தி
உலகளவில் 35,000 மெகாவாட் அளவிற்கு காற்றாலை உற்பத்தி திறன் உள்ளது. இதில் 2013-ம் ஆண்டில் 3,18,000 மெகாவாட் அளவிற்கு ஆன மின் உற்பத்தியில், இந்தியாவின் பங்காக 1700 மெகாவாட் உள்ளது.
உற்பத்தி திறன் மேம்பாடு
இதில் சீனாவில் மட்டும் அதிகளவாக 29,000 மெகாவாட் திறன் அளவிற்கு மேம்படுத்தபட்டுள்ளது. துருக்கி, பிரேஸில், வியட்நாம், இந்தியா மற்றும் இரஷ்யா ஆகிய நாடுகளும் குறிப்பிடத்தக்க அளவிற்கு உற்பத்தியை மேம்படுத்தியுள்ளன
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications