சொத்து வரி செலுத்தாதோர் மீது கடுமையான நடவடிக்கை!! சென்னை மாநகராட்சி

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் நேரடி மற்றும் மறைமுக வரி இலக்கை எப்படியாவது எட்டிவிட வேண்டும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தீயாய் வேலை செய்து கொண்டு இருக்கையில், சென்னை மாநகராட்சி பகுதியில் 7,000 பேர் தங்களது சொத்துக்கான வரியை செலுத்த தவறியுள்ளனர்.

 

இது தொடர்பாக சென்னை மாநகராட்சியின் முதன்மை செயலாளர் விக்ரம் கபூர் அவர்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில், சொத்து வரி செலுத்தாதவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அவர்களின் பெயரை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடவும் அவர் உத்தவிட்டார்ள்ளர்.

அதிரடி திட்டங்கள்

அதிரடி திட்டங்கள்

நடப்பு நிதியாண்டின் இறுதியில் வரி செலுத்தாத பெரிய நிறுவனங்களின் வாசல்களில் மாநகராட்சி சுவரொட்டி ஒட்டப்படும். மேலும் தொடர்ந்து வரி செலுத்தாமல் இருப்பவர்களின் பெயர் பட்டியலை மாநகராட்சி இணைய தளத்தில் கண்டிப்பாக வெளியிடப்படும் என மாநகராட்டி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு சின்ன கணக்கு

ஒரு சின்ன கணக்கு

ஒருவரின் காலாண்டு சொத்து வரி ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் என்று வைத்துக்கொண்டால், ஒரு வருடத்திற்கு லட்ச ரூபாய்க்கு மேல் தாண்டிவிடும், தொடர்ச்சியாக செலுத்தாத நிலையில் பல லட்சத்தை தாண்டிவிடும். இதுபோன்று சுமார் 7000 பேர் வரி செலுத்தாமல் உள்ளனர், எனவே இத்தொகையும் அதிகம்.

வரி செலுத்தாதவர்கள்..
 

வரி செலுத்தாதவர்கள்..

வரி செலுத்தாதவர்தவர்களின் முழு விபரங்களும் மாநகராட்சி சேகரிக்கப்பட்டுள்ளது. அவர் அடுத்த காலாண்டிற்குள் வரி செலுத்தாத முடியாவிட்டால், அவர்களின் பெயர்கள் மாநகராட்சி இணைய தளத்தில் வெளியிடப்படும். வரி செலுத்தியவுடன் அவர்கள் பெயர் இணையதளத்தில் இருந்து நீக்கப்படும். நீதிமன்ற வழக்குகளில் உள்ள சொத்துக்களின் மீது வரிவசூல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சொத்து வரி வசூல்

சொத்து வரி வசூல்

கடந்த 2012-13ஆம் ஆண்டில் மட்டும் சென்னை மாநகராட்சிக்கு ரூ. 460 கோடி சொத்து வரி வருவாய் கிடைத்தது. இது 2013-14ஆம் ஆண்டுகளில் ரூ. 480 கோடியாக உயர்ந்தது. பாராளுமன்ற தேர்தல் பணியில் ஊழியர்கள் ஈடுபட்ட போதிலும் வரி வசூல் பாதிக்கவில்லை. இந்த காலாண்டில் ரூ. 152 கோடி சொத்து வரி வசூலாகி உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவதற்கு முழு முயற்சி மேற்கொள்ளப்படும்.

அரையாண்டு வரி வசூல்

அரையாண்டு வரி வசூல்

இந்த சொத்து வரி சென்னை மாநகராட்சி பகுதியில் அரையாண்டு வரி என ஆண்டுக்கு இரண்டுமுறை சொத்துவரி வசூலிக்கப்படுகிறது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை முதல் அரையாண்டு சொத்துவரி செலுத்த வேண்டும். அக்டோபர் 1 முதல் 15ஆம் தேதிக்குள் 2வது அரையாண்டு வரி கட்ட வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Property tax defaulters to face strict action chennai corporation

Chennai Corporation has started publishing the list of property tax defaulters online. On Tuesday evening, officials released the first list of 195 defaulters from areas such as T. Nagar, Royapettah, Alandur, Nungambakkam, Teynampet and Mylapore. 
Story first published: Wednesday, August 20, 2014, 13:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X