மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய எஃகு உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனம், வெல்ஸ்பன் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வெல்ஸ்பன் மேக்ஸ்-ஸ்டீல் நிறுவனத்தை சந்தை மதிப்பின் படி சுமார் 1,000 கோடி ரூபாய்க்கு கைப்பற்ற திட்டமிட்டுள்ளது. ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தை ஜின்டால் குழுமத்தின் சஞ்சன் ஜிண்டால் நிர்வாக தலைமையில் இயங்கி வருகிறது.
வெல்ஸ்பன் மேக்ஸ்-ஸ்டீல் நிறுவனத்திற்கு நீண்ட கால கடனாக சுமார் 1,087 கோடு ரூபாய் உள்ளது. இக்கடன் தொகையை குறைக்க முடியாமல் நிறுவனத்தை விற்க முடிவு செய்துள்ளது வெல்ஸ்பன் எண்டர்பிரைசஸ். இந்நிறுவனத்தை கைபற்றியதன் மூலம் இந்தியாவில் இந்நிறுவனம் தனது ஸ்டீல் உற்பத்தியை அதிகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
பங்கு விலை
இந்தியாவில் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் ஸ்டீல் ஒன்று. இந்நிலையில் எஃகு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் நடப்பு கணக்கு பாற்றாக்குறையை வலிமையான நிலைக்கு உந்திச்செல்ல முடியும். இந்நிறுவன கைபற்றுதலின் மூலம் ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் பங்குகள் 0.10 சதவீதம் உயர்ந்துள்ளது.
இலக்கு
ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனம் இந்தியாவில் 14.3 மில்லியன் டன் எஃகு உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. அடுத்த 10 வருடத்தில் இந்நிறுவனம் தனது உற்பத்தி திறனை 40 மில்லியன் டன் வரை உயர்த்த திட்டமிட்டள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு இத்தகைய நிறுவனங்களின் கைபற்றுதல் ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்திற்கு அவசியமாகிறது.
புதிய தொழிற்சாலை
இந்த வெல்ஸ்பன் மேக்ஸ்-ஸ்டீல் நிறுவனம், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் டோல்வி தொழிற்சாலைக்கு 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் இந்நிறுவனங்களுக்கும் இடைய் நடக்கும் உருக்குப்பொருள் பரிமாற்றம் எலிமையாக செய்துகொள்ள முடியும் என இந்நிறுவனத்தின் சேஷகிர் ராவ் தெரிவித்தார்.
செயல்பாட்டு செலவுகள்
மேலும் ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனம், வெல்ஸ்பன் மேக்ஸ்-ஸ்டீல் நிறுவனத்தில் அதிக செயல்பாட்டு செலவுகளை உறுஞ்சும் தொழிற்நுட்பங்களை மாற்றி அமைக்க உள்ளதாகவும் ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இஸ்பட்
இந்நிறுவனம் கடந்த 2010ஆம் இஸ்பட் என்ற எஃகு உற்பத்தி நிறுவனத்தை 2,157 கோடி ரூபாய்க்கு கைபற்றியது இந்நிறுவனத்தின் ஒரு மைல்கல் என்றே சொல்லாம்.


Click it and Unblock the Notifications