டெல்லி: மத்திய அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 21 இலட்ச வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இந்நிறுவனம் பயன்பாட்டில் இல்லாத வாடிக்கையாளர்களின் இணைப்பை துண்டிக்கும் பணியில் ஈடுப்பட்ட போது 21 இலட்ச வாடிக்கையாளர்கள் பயன்பாட்டில் இல்லாததை இந்நிறுவனம் கண்டிறிந்துள்ளது.
இந்த இணைப்பு துண்டிப்பின் மூலம் இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 8.94 கோடியாக குறைந்துள்ளது குறிப்பிடதக்கது.
என்ன காரணம்??
கடந்த 10 வருடமாக வாடிக்கையாளர் தளத்தில் பயன்பாட்டில் இல்லாத வாடிக்கையாளர்களை நீக்கும் பொருடாக இணைப்பு துண்டித்தோம். இதன் மூலம் இந்த இணைப்பு எண்ணை மீண்டும் உபயோகப்படுத்த முடியும் என பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தலைவர் அனுபம் தெரிவித்தார்.
ஸ்பெக்ட்ரம்
முன்பு ஸ்பெக்ட்ரம் அலைக்கதிர்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கையை பொருத்து வழங்கப்பட்டு இருந்தது. இதனால் பயன்பாட்டில் இல்லாத வாடிக்கையாளரை கூட கணக்கில் காட்டப்பட்டு வந்தது. ஆனால் இப்போதும் வாடிக்கையாளர் தளத்தில் இருந்து ஸ்பெக்ட்ரம் நீக்கப்பட்டது.
எம்.டி.என்.எல்
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை போன்று மற்றொரு அரசு தொலைதொடர்பு நிறுவனமான எம்.டி.என்.எல் நிறுவனமும் 30,304 வாடிக்கையாளர்களை இழந்ததுள்ளது.
சந்தை மதிப்பீடு
அரசு தொலைதொடர்பு நிறுவனங்களின் தரமற்ற சேவைகள் மற்றும் வாடிக்கையாளருக்கு ஏற்ற சேவைகள் அளிக்கப்படாத காரணங்களால் இந்நிறுவனங்களின் சந்தை மதிப்பு குறைந்து வருகிறது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு கடந்த மே மாதத்தில் 13.27 சதவீதத்தில் இருந்து 12.3 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோல் எம்.டி.என்.எல் நிறுவனத்தின் சந்தை மதிப்பும் 4.83 சதவீதமாக குறைந்துள்ளது.
தொலைதொடர்பு அமைச்சகம்
இந்த இரு நிறுவனங்களையும் மேம்படுத்த மத்திய அமைச்சகம் சுமார் 10,000 கோடி ரூபாய் அளவிலான நிதி உதவியை அளிக்க முன்வந்துள்ளது.
நஷ்டம்...
2012-13ஆம் நிதியாண்டில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் சுமார் 8,198 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை சந்தித்தது. அதேபோல் எம்.டி.என்.எல் நிறுவனம் 5,321.12 கோடு ரூபாய் சந்தித்தது குறிப்பிடதக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications