மும்பை: சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறன் தலைமை வகிக்கும், மலிவு விலை விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சந்தை மதிப்பீட்டில் இந்திய அளவில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது. இந்நிகழ்வு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஊக்க சக்தியாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் சந்தை போக்குவரத்தில் சுமார் 20.9 சதவீதத்தை ஸ்பைஸ்ஜெட் பெற்றுள்ளதாகவும், ஜூன் மாதத்தில் வெறும் 19 சதவீதம் மட்டுமே பெற்றிருந்ததாக தெரிவித்தது. இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த இரு மாதங்களாக 19.6 சதவீதம் என்ற அளவிலேயே இருந்தது குறிப்பிடதக்கது.
அதிரடியான வளர்ச்சி
இந்நிறுவனத்தின் சிறப்பான சலுகை திட்டங்கள் வாடிக்கையாளர்களை அதிகளவில் கவர்ந்துள்ளதாகவும், மேலும் விமான சேவையின் திட்டங்கள் சரி வர திட்டமிட்டு இருப்பதால் சந்தையில் அதிகப்படியான வாடிக்கையாளர் எண்ணிக்கையும், அதிகப்படியான லாபத்தை பெற்றுள்ளோம் என இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் கபூர் தெரிவித்தார்.
போட்டி நிறைந்த சந்தை
கடந்த சில வருடங்களாக இந்திய சந்தையில் விமான சேவை நிறுவனங்களிடையே மிகப்பெரிய போட்டி உருவாகியுள்ளது. இப்போடியை சமாளித்துக்கொள்ள அனைத்து நிறுவனங்களும் அதிரடியான சலுகைகள் மற்றும் தள்ளுபடி திட்டங்களை அறிவித்து வருகிறது.
இண்டிகோ முதல் இடத்தில்
இந்திய சந்தியில் பறக்கும் இண்டிகோ நிறுவனத்தின் வளர்ச்சி 31.7 சதவீதத்தில் இருந்து 30.7 சதவீதமாக குறைந்தாலும், சந்தையில் மதிப்பீட்டி முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடதக்கது.
முதல் காலாண்டு நஷ்டம்
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்நிறுவனம் 124.10 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது. மேலும் இந்நிறுவனம் தொடர்ந்து 4 காலாண்டுகளில் தொடர் சரிவை சந்தித்து வருவது குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications