டெல்லி: இந்திய பாதுகாப்புத் துறைக்கான அன்னிய முதலீட்டை மத்திய அரசு 49 சதவீதத்திற்கு உயர்த்தியதை தொடர்ந்து சுமார் 15 பன்னாட்டு உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் தனது உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க முன் வந்துள்ளது.
இந்நிலையில் பல இந்தியா நிறுவனங்கள் துப்பாக்கி, போர் கப்பல் மற்றும் போர் களத்தில் அதிகம் பயன்படுத்து டாங்குகளை உருவாக்க பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது, மேலும் சில நிறுவனங்கள் இதற்கான பணிகளை துவங்கியுள்ளது குறிப்பிடதக்கது.
ஆயுத இறக்குமதி
உலக நாடுகள் மத்தியில் அதிகளவில் ஆயுத இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதற்காக மத்திய அரசு அதிகப்படியான பணத்தை செலவு செய்து வருகிறது. இந்த செலவை குறைக்கவும், இந்திய ராணுவத்தை வலுப்படுத்தவே இந்திய பாதுகாப்புத்துறையில் அதிகப்படியான அன்னிய முதலீட்டுக்கு வழிவகுத்தது.
ரஷ்யா மற்றும் சீனா
இந்திய ராணுவத்தை நமது நட்பு நாடான ரஷ்யாவுக்கு இணையாகவும், பாதுகாப்புத் துறையில் வருடத்திற்கு 120 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யும் சீனாவிற்கும் இணையாக இந்தியா உருவெடுக்க மத்திய அரசு அடுத்த பத்து ஆண்டுகளுக்கு சுமார் 250 பில்லியன் டாலர் முதலீடு செய்யதிட்டமிட்டுள்ளது. மேலும் இந்த 10 வருடங்களில் இந்தியாவில் ராணுவத்திற்கு தேவையான அனைத்து வகையான உபகரணங்களில் தயாரிப்பு துவங்கி விடும் என்பது குறிப்பிடதக்கது.
ராணுவ பாதுகாப்பு
முன்னாள் மத்திய அரசு பாதுகாப்பு துறையில் செய்த குளறுபடிகளால் இந்திய ராணுவம் பிற நாடுகளை எதிர்கொள்ளும் அளவிற்கு தகுதியானதாக இல்லை என உலக மத்திய கருத்து நிலவுகிறது. குறிப்பாக கடற்படை மிகவும் பலவீணாமாக உள்ளதை சுட்டுகாட்டி வருகின்றனர்.
தேர்தல் 2014
2014ஆம் ஆண்டு மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டு இருந்தவரே பாதுகாப்புத் துறையில் பல பிரச்சனைகள் மற்றும் எதிர்ப்புகளை தாண்டி இத்துறையில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அன்னிய முதலீட்டு வழிவகுத்தார்.


Click it and Unblock the Notifications