டெல்லி: ஆட்டோ மொபைல் துறையில் இந்தியாவில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய்,இந்தியாவிலும் வெளிநாடுகளில் நிலவி வரும் போட்டியை சமாளிக்க இந்தியாவில் இரண்டாவதுஉற்பத்தி தொழிற்சாலையை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய தொழிற்சாலையை அமைப்பதன் மூலம் வருடத்திற்கு 2 அல்லது 3 புதிய மாடல்கார்களை வெளியிடவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தியாவில் ஹோண்டா, போர்டு,மற்றும் மாருதி நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க இது சரியான முடிவாக இருக்கும் எனஹுண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை தொழிற்சாலை
சென்னையில் இருக்கு இந்நிறுவன தொழிற்சாலையில் வருடத்திற்கு சுமார் 6.8 இலட்ச கார்களைஉற்பத்தி செய்கிறது. இதில் பொரும்பாலான கார் எண்ணிக்கையை ஹுண்டாய் நிறுவனம்வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. மேலும் இவ்வருட இறுதிக்குள் இந்த உற்பத்திஎண்ணிக்கையை 7 இலட்ச கார்கள் என உயர்த்த ஹூண்டாய் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
2வது தொழிற்சாலை
ஐரோப்பிய நாடுகளுக்கு எங்கள் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ய இந்தியா பெரும் உதவியாகஉள்ளது. இந்நிலையில் உலக நாடுகளில் அதிகளவில் கவரவும், இந்தியா சந்தையை மேலும்வலுப்படுத்தவும் இந்தியாவில் 2வது தொழிற்சாலை அமைப்பது குறித்து தீவரமான ஆலோசனையில்ஈடுப்பட்டுளோம் என இந்நிறுவனத்தின் உயர்அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதலீடு
வருடத்திற்கு இந்தியாவில் 2 இலட்சத்திற்கு மேலான கார்களை விற்பனை செய்து வருகிறோம்.மேலும் புதிய தொழிற்சாலையை அமைப்பதன் மூலம் நிறுவனம் அதிகப்படியாக முதலீடு செய்யஉள்ளது. இதன் மூலம் நாட்டில் அதிகப்படியான வேலைவாய்ப்பு உருவாகும்.
வளர்ச்சி குறைவு
இந்திய சந்தையில் கடந்த இரண்டு வருடமாக குறைந்தபட்ச வளர்ச்சியை சந்தித்து வருகிறதுஎன்றும், அடுத்த வரும் நிதியாண்டுகளில் அதிகப்படியான வளர்ச்சியை பெறும் முயற்ச்சியில்ஈடுப்பட்டு உள்ளோம் எனவும் இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications