மும்பை: இந்தியாவிலிருந்து அதிகளவில் மருந்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் ரான்பாக்ஸி நிறுவனம் முக்கிய பங்கு வகித்தது, ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் இந்நிறுவன தயாரிப்புகளுக்கு அமெரிக்காவில் முழுமையாக தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்நிறுவனத்தின் மொத்த வர்த்தகமும் முழ்கியது.

அமெரிக்காவில் மருந்து விநியோகம் மற்றும் ஏற்றுமதி விதிமீறலுக்காக இந்நிறுவனம் தற்போது 240 கோடி ரூபாய் செலுத்த வோண்டும் என அமெரிக்க அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த ஜனவரி மாதம் இந்நிறுவனத்தின் பஞ்சாப்பில் தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களுக்கும் அமெரிக்க அரசு தடைவிதித்தது.
அத்துடன் ரான்பாக்ஸியின் மேலும் 3 தயரிப்புகள் அமெரிக்க உற்பத்தி தரத்தின் விதிகளுக்கு உட்பட்டதாக இல்லை எனவும் அறிவித்துள்ளது.
இந்த பிரச்சனைகளுக்கு பின்பு இந்நிறுவனத்தை முழுமையாக இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் ஒருவரான சன்பார்மா நிறுவனத்தின் திலிப் சங்கவி 4 பில்லியன் டாலருக்கு கைப்பற்றினார்.


Click it and Unblock the Notifications