சென்னை: மும்பை பங்கு சந்தை மற்றும் நிஃப்டி சந்தைகளின் வர்த்தகத்தில் இன்று 26,582.27 மற்றும் 7,957.70 என தத்தம் புள்ளிகளை எட்டி புதிய உச்சத்தை தொட்டது. இன்றைய நாளில் சுகாதாரம், வங்கி மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன பங்குகள் அதிகளவில் வர்த்தகம் செய்யப்பட்டது.
பங்கு சந்தையில் ஆசியா நாடுகளில் இருந்து குவிந்த அதிகப்படியான நிதி உட்செலுத்துதலின் காரணமாக புதிய உச்சத்தை பெற்றது.
வர்த்தக முடிவில் சரிவு
காலை வர்த்தக துவக்கத்தில் இரு சந்தைகளும் சிறப்பாக இருந்தது, ஆனால் வர்த்தக முடிவின்போது நேற்றைய சந்தையின் முடிவுகளை விட குறை வான அளவில் சந்தை முடிவடைந்தது.
எண்ணெய் நிறுவனங்கள்
மேலும் மேற்கத்திய நாடுகளில் எண்ணெய் ஏற்றுமதி மீது நிலவும் பாதிப்புகள் கடந்த சில நாட்களாக எண்ணெய் நிறுவன பங்குகள் சரிவை தழுவி வந்தது. ஆனால் இன்று பாதிப்புகளையும் மீறி ஆசிய சந்தையின் சில அன்னிய முதலீடு நிறுவனங்கள் எண்ணெய் நிறுவன பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்தது.
சூப்பர் ஸ்டார்
இன்றைய வர்த்தகத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, மாருதி சூசுகி, டாக்டர் ரெட்டி, ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ், ஒஎன்ஜிசி, பெல், சன் பார்மா டிசிஎஸ் மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் மிகவும் சிறப்பாக சூப்பர் ஸ்டார் போல செயல்பட்டது, இதனால் சந்தையும் புதிய உயரத்தை எட்டியது சாத்தியமானது.
ஆசிய சந்தைகள்
இந்திய சந்தை போலவே ஜப்பான் நிக்கி 0.40 சதவீதம் உயர்ந்தது, அதேபோல் ஹாங்காங் ஹாங் செங் சந்தையும் 0.25 சதவீதம் உயர்வை சந்தித்தது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications