இன்போசிஸ் நிறுவனத்தில் சேர்ந்ததால் விஷால் சிக்காவிற்கு என்ன கிடைத்தது??

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இன்ஃபோசிஸ் நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு கடந்த வெள்ளியன்று சமர்ப்பித்த அறிக்கையில், அதன் தலைமை செயல் அதிகாரியான விஷால் சிக்காவிற்கு சுமார் 22,794 வரையரறுக்கப்பட்ட பங்குகளை அவருடைய சம்பளத்தின் ஒரு பகுதியாக வழங்கியுள்ளதாக குறிப்பிட்டு இருந்தது. இன்றைய நிலவரப்படி இன்போசிஸ் நிறுவன பங்குகளின் மதிப்பு 3611.10 ரூபாய்.

 

இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய சீஇஓ

இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய சீஇஓ

ஆகஸ்டு மாதம் 1ஆம் தேதி இந்தியாவின் இரண்டாம் பெரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற சிக்கா, இந்திய நிறுவனங்களிலேயே அதிகம் சம்பளம் பெறும் தலைமை அதிகாரி ஆவார்.

அப்படி என்ன சம்பளம் வாங்குகிறார்??

அப்படி என்ன சம்பளம் வாங்குகிறார்??

விஷால் சிக்கா வருடத்திற்கு 50.8 லட்சம் அமெரிக்க டாலர்கள் அதாவது, சுமார் 30 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். இதில் ஒன்பது லட்சம் அமெரிக்க டாலர்கள் அடிப்படை சம்பளமாகவும், 41.8 லட்சம் டாலர்கள் நிறுவனத்தின் நிதிக் குறிக்கோள்கள் எட்டப்படும் அளவைப் பொறுத்து மாற்றுவிகித சம்பளமாளமாகவும் வழங்கப்படும்.

இது மட்டுமல்ல
 

இது மட்டுமல்ல

இவருக்கு சம்பளத்திற்கு மேல் 20 லட்சம் டாலர் மதிப்புள்ள பங்குகளைப் பெறவுள்ளார், தற்போது அளிக்கப்பட்டுள்ள பங்குகளும் இந்த அடிப்படையில் தரப்பட்டவையே ஆகும். "இந்த பங்குகளின் விலை ஐந்து ரூபாய். இவை அடுத்த நான்கு வருடங்களுக்கு அவர் பதவியில் நீடிப்பதை பொறுத்தும், நிறுவனம் அவருக்குத் தந்துள்ள லட்சியங்கள் எட்டப்படுவதன் அடிப்படையிலும் சம்பள ஆய்வுக் குழு அவ்வப்போது தரும் பரிந்துரைகளின் அடிப்படையிலும் அவருக்குச் சொந்தமாக இருக்கும்" என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க பங்குச் சந்தை

அமெரிக்க பங்குச் சந்தை

இன்ஃபோசிஸ் அண்மையில், 2011 ஆம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட பங்குகள் திட்டத்தினை அமெரிக்க பங்குச் சந்தை ஆணையத்திடம் (எஸ்இசி) அறிவித்தது. அதன்படி, அந்த நிறுவனம் 28.33 லட்சம் பங்குகளை தன் பணியாளர்களுக்கு வழங்கமுடியும்.

பணியார்களை தக்க வைத்துக்கொள்ள

பணியார்களை தக்க வைத்துக்கொள்ள

இதன் மதிப்பு பதினைந்து கோடி டாலர்கள் வரை இருக்கும். எஸ்இசி -யிடம் அளிக்கப்பட்ட தகவல்களின்படி, இந்த திட்டம் முக்கிய பணியாளர்களைக் கவரவும், பணியில் நீடிக்க ஊக்கப்படுத்தவும் அவர்களை ஊக்குவிக்கவும் செய்யப்பட்டது எனத் தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys's Vishal Sikka receives stock grant

Infosys informed the Bombay Stock Exchange on Friday that it had granted 22,794 restricted stock units (RSUs) to Vishal Sikka as part of his overall salary package. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X