புவனேஸ்வர்: இந்தியாவில் பலதுறை நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, ஒடிசாவில் 12,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 2,500 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையத்தை துவங்க திட்டமிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் அதானி குழுமத்தின் மின் உற்பத்தி செய்யும் திறன் 25 சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், மின் விநியோகத்தையும் அதிகரிக்கும் என்றும் தெரிகிறது. மேலும் இந்தியாவில் வளரந்து வரும் மின் உற்பத்தி நிறுவனங்களில் மிக முக்கியமான நிறுவனம் அதானி பவர் ஆகும்.
அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி பிரதமர் நரேந்திர மோடி யின் நெருங்கிய நன்பர் ஆவார்.
லான்கோ இன்ஃப்ரா
அதானி குழுமம் சமிபத்தில் கர்நாடகாவில் உள்ள லாங்கோ இன்ஃப்ராடெக் நிறுவனத்திற்கு சொந்தமான உடுப்பி மின் உற்பத்தி நிலையத்தை சுமார் 6000 கோடி ரூபாய்க்கு கைபற்றியது. இந்நிறுவனத்தை கைபற்றிய அடுத்த சில நாட்களில் ஒடிசா மின் திட்டத்தை அறிவித்தது குறிப்பிடதக்கது.
1,200 மெகாவாட் மின் உற்பத்தி
இந்த உடுப்பி மின் உற்பத்தி நிலையம் சுமார் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி திறனுடையது. மேலும் இந்த மின் நிலையம் முழுக்க முழுக்க இறக்குமதி செய்யப்படும் நிலக்கறியின் மூலம் செயல்பட்டு வருகிறது.
ஒடிசா மின் நிலையம்
அதானி குழுமம், இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தை ஒடிசா அரசுடன் இணைந்து இன்னும் நான்கு மாதங்களுக்குள் கையெழுத்திட்டு மின் நிலையக் கட்டுமானப் பணிகளைத் துவங்கவுள்ளதாக அந்த நிறுவனத்தின் சுரங்கத் துறைத் தலைவர் ராஜேஷ் ஜா தெரிவித்ததாக ரியூட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இலக்கு மற்றும் தேவைகள்
அதானி குழுமம் ஒடிசாவில் 1000 மெகாவாட் உற்பத்தி என்ற இலக்கை 2017 ஆம் ஆண்டிற்குள் அடைய எண்ணியுள்ளது. இதற்குத் தேவையான நிலக்கரி, ஒடிசாவில் இருக்கும் 70 மில்லியன் டன் நிலக்கரி சுரங்கங்களிலிருந்து பெறப்படும்.
20 சதவீத வளர்ச்சி
தற்போது அதானி பவர், சுமார் 8,580 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவியுள்ளதோடு, தற்போது ஒடிசா அரசுடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் மூலமும், லாங்கோ நிறுவனத்தை கையகப்படுத்தியதன் மூலமும் மின் உற்பத்தில் சுமார் 20 சதவீத வளர்ச்சியை காண உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications