மும்பை: இந்திய தபால் துறை அடுத்த இரண்டு வருடத்தில் 1,000 ஏடிஎம்களை நிறுவ திட்டமிட்டுள்ளது இதன் மூலம் நாட்டில் தனது வங்கி சேவை வலுப்படுத்துவதுடன், முழுமையான வங்கியாக செயல்பட தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளும்.
தற்போது இந்திய தபால் துறை நாட்டில் சென்னை, டெல்லி ஆகிய இரண்டு இடங்களில் ஏடிஎம் இயந்திரத்தை வைத்துள்ளது. பொது மக்களிடம் இதன் வரவேற்பு சிறப்பாக இருந்ததால் நாட்டின் பிற பகுதிகளில் இருக்கும் முக்கிய தபால் நிலையங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்த தபால் துறை முடிவு செய்துள்ளது.

676 தபால் நிலையங்கள்
கடந்த 2012ஆம் ஆண்டு முதல் இந்திய தபால் நிலையத்தை முழு வங்கியாக மாற்ற முடிவு செய்து, சுமார் 676 தபால் நிலையங்களை வங்கி செயல்பாட்டில் இறக்கியுள்ளது. 2016ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 25,000ஆக உயரும் என தபால் துறை தெரிவித்துள்ளது.
நிதியுதவி
மேலும் தபால் துறை முழுமையான வங்கியாக மாற்ற தபால் துறை சுமார் 5,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
ரிசர்வ் வங்கி தற்போது வங்கியாக செயல்பட பாதி உரிமம் மட்டுமே வழங்கியுள்ளது. முழுமையான உரிமம் கிடைத்த உடன் இந்திய தபால் துறை நாட்டின் மிகப்பெரிய வங்கியாக உருவெடுக்கும்.


Click it and Unblock the Notifications