2 நாளில் 1 கோடி வங்கி கணக்கு திறக்கும் திட்டம்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய அரசின் அனைத்து மக்களுக்கான இருகட்ட நிதி சேவைக்கான பணி - பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் (Pradhan Mantri Jan Dhan Yojana) வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி செயற்படுத்தப்பட உள்ளது.

 

இத்துவக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகிக்க, சக அமைச்சரவை மூத்த ஊழியர்களால் தலைநகரில் நடக்க தயாராக உள்ளது என்று வளர்ச்சி துறைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிகின்றன.

எல்லோருக்கும் வங்கி சேவை

எல்லோருக்கும் வங்கி சேவை

அதே நேரத்தில் நாட்டில் பல்வேறு மாநில தலைநகரங்களிலும், மாவட்டங்களிலும் துவக்க விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். பிரதமர் நரேந்திர மோடி, தனது சுதந்திர தின உரையில் இது வரை வங்கி சேவை கிடைக்க பெறாத குடும்பங்களும் இந்த ஜன் தன் யோஜனா திட்டத்தில் சேர்க்கபடும் என்று கூறினார்.

15 கோடி வங்கி கணக்குகள்

15 கோடி வங்கி கணக்குகள்

இந்த பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம், ஒரு குறிக்கோளின் அடிப்படையில் இரண்டு கட்டங்களாக முன் மொழியப்பட உள்ளது. இது வரை வங்கி சேவை பெறாத 7.5 கோடி குடும்பங்களையும் இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் 15 கோடி வங்கி கணக்குகள் தொடங்க செய்வதன் மூலம் வங்கி சேவைக்குள் கொண்டு வர வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயற்படுத்தப்பட உள்ளது.

2,500 ரூபாய் வரவு
 

2,500 ரூபாய் வரவு

வங்கி கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 6 மாதங்களுக்கு பிறகு ஒருவர் தனது வங்கி கணக்கினை இயக்கும் தன்மையை பொறுத்து, வங்கிகள் அவரது கணக்கில் மிகைப்பற்று நிதியாக ரூ2,500 வரை அதிகரிக்க முடியும். இந்த அளவு பின்னர் ரூ5,000 வரை கூட அதிகபடுத்தகூடும் என்று ஒரு வங்கியாளர் கூறினார்.

பிரபலப்படுத்த திட்டம்...

பிரபலப்படுத்த திட்டம்...

இந்த புதிய நிதி சேர்க்கை திட்டத்திற்காக அரசு ,ஒரு விளம்பர பிரச்சாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

1 கோடி வங்கி கணக்கு

1 கோடி வங்கி கணக்கு

மேலும் இத்திட்டம் துவங்கிய 2 நாட்களில் 1 கோடி வங்கி கணக்கை திறக்க இக்குழு திட்டமிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Pradhan Mantri Jan Dhan Yojana to be rolled out on August 28

The BJP Government's two phase financial inclusion mission--Pradhan Mantri Jan Dhan Yojana--will be rolled out on August 28.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X