டெல்லி: இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் இகாமர்ஸ் துறையும் ஒன்று, சமிபத்தில் இன்போசிஸ் நாராயண மூரத்தி இத்துறையின் முன்னணி நிறுவனமான ஆமேசான் நிறுவனத்தில் பெருமளவு முதலீடு செய்தார். இதேபோல் இப்போது டாடா குழுமத்தின் தலைவரான ரத்தன் டாடா ஸ்னாப் டீல் நிறுவனத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளார்.
இம்முதலீட்டை குறித்து ஸ்னாப் டீல் நிறுவனத்தின் சீஇஓ மற்றும் துணை நிறுவனரான குணால் பாஹ்ல் கூறுகையில்,"ரத்தன் டாடா, டாடா நிறுவனத்தின் பெயரில் முதலீடு செய்யவில்லை. தனது தனிப்பட்ட பணத்தை முதலீடு செய்யதுள்ளார்." என அவர் தெவித்தார். மேலும் திரு. ரத்தன் டாடா எவ்வளவும் முதலீடு என்ற தகவலை ஸ்னாப் டீல் வெளியிட மறுத்துவிட்டது.
தற்போது இச்சந்தையில் பிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல் நிறுவனங்களுக்கும் மத்தியில் போட்டி இருப்பதாக தெரிவில்லை.. இந்திய ஐடி துறையின் பெரும் புள்ளிகளின் போட்டியாகவே தெரிகிறது. இன்போசிஸ் நாராயணமூர்த்தி தனது சொந்த முதலீட்டு நிறுவனத்தின் மூலமாக அமேசான் நிறுவனத்தில் முதலீடு செய்யதுள்ளார், அதேபோல் இப்போது ரத்தன் டாட அவர்கள் டாடா குழுமத்தின் பெயரில் அல்லாமல் தனது தனிப்பட்ட முதலீட்டை ஸ்னாப்டீல் நிறுவனத்தில் செய்துள்ளார். இதில் அசிம் பிரேம்ஜி மட்டும் என்ன விதிவிளக்கா?? அவரும் டெல்லியை சேர்ந்த ஒரு இகாமர்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார், அதேபோல் பிளிப்கார்ட் நிறுவனம் வளைத்துப்போட்ட மன்திரா நிறுவனத்திலும் பிரேம்ஜி முதலீடு செய்திருந்தார். ஸ்னாப்டீல் நிறுவனம் இகாமர்ஸ் துறையில் கடந்த 4 வருடமாக சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் ஈபே, அமேசான் போன்ற நிறுவனங்கள் களமிறங்கிய காலகட்டத்தில் பல இகாமர்ஸ் நிறுவனங்கள் மூடப்பட்டது. இத்தகைய கடுமையான போட்டிகளை எதிர்த்து தற்போத அமேசான், பிளிப்கார்த் போன்ற நிறுவனங்களுக்கு கடுமையான போட்டி அளித்து வருகிறது. நிறுவனத்தை துவங்கிய காலத்தில் இருந்து இந்நிறுவனம் சுமார் 400 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. இதில் 100 மில்லியன் டாலர் அளவு நிதியை செயல்பாடு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் விரிவாக்கத்திற்காக செலவு செய்துள்ளது. இந்நிறுவனம் கடந்த இரண்டு வருடமாக சுமார் 600 சதவீத வளர்ச்சியை சந்தித்துள்ளது குறிப்பிடதக்கது. மேலும் இந்நிறுவனத்தில் 5 மில்லியன் பொருட்கள்ஷ மற்றும் 500க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விற்பனை செய்து வருகிறது.
ஐடி பெரும் தலைகள்
ஆயுத எழுத்து..
நான்கு வருட உழைப்பு
நிதி திரட்டுதல்
வளர்ச்சி


Click it and Unblock the Notifications