மும்பை: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி செவ்வாய் கிழமையன்று வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.15% அளவிற்கு குறைக்க உள்ளதாக அறிவித்தது. இதை தொடர்ந்து வீட்டுக் கடன் அளிக்கும் பிற வங்கியியல் நிறுவனங்களும் வட்டியை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்தியாவில் அதிகப்படியாக வீட்டுக் கடன் வழங்கிய வங்கிகளில் எஸ்பிஐ முதல் இடமும், ஹெச்டிஎஃப்சி வங்கி இரண்டாவது இடத்தையும் பிடிக்கிறது.
வீட்டுக் கடன்
எஸ்பிஐ வங்கியில் ரூ.75 இலட்சம் வரையிலும் புதிதாக வீட்டுக் கடன் பெறுபவர்களுக்கு தற்போதுள்ள 10.15 சதவீதத்திலிருந்து, 10.10 சதவீதமாக வட்டியை குறைத்துள்ளது.முன்னதாக பெண் வாடிக்கையாளர்களுக்கு அளித்த 0.05 சதவீதம் சலுகையையும் நீக்கி, அனைவருக்கும் ஒரே விதமான வட்டி விகிதத்தை இந்த வங்கி நடைமுறைப்படுத்தியுள்ளது.
75 இலட்சத்திற்கு அதிகமான கடன்
ரூ.75 இலட்சத்திற்கும் அதிகமாக வழங்கப்படும் கடன்களைப் பொறுத்த வரையில், புதிய வட்டி விகிதமாக 10.15 சதவீதம் இருக்கும் என்றும், இது நடைமுறையில் உள்ள 10.15-ல் இருந்து 0.15 சதவீதம் குறைந்த அளவாகும்.
அனைவருக்கும் ஒரே விதமான வட்டி..
'ஆகஸ்ட் 26 முதல் வீட்டுக்கடனின் அளவு எதுவாக இருந்தாலும், அனைத்துக்கும் ஒரே மாதிரியான வட்டி விகிதத்தை வழங்க முடிவெடுத்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி
ஆகஸ்ட் மாதம் நிதிக்கொள்கையை மாற்றியமைத்த போது இந்திய ரிசர்வ் வங்கி குறைந்த கால கடன் விகிதத்தை 8 சதவீதமாக வைத்துள்ளது. உறுதியில்லாத பருவநிலை மற்றும் உணவு உற்பத்தியில் அதன் தாக்கம் ஆகியவற்றுடன், சர்வதேச எண்ணெய் விலையில் இருந்த நிலையற்ற தன்மை ஆகிய காரணிகளால் பண இருப்பு விகிதம் (CRR) 4% ஆக மாற்றியமைத்து குறிப்பிடதத்தக்கது.
பணப் புழக்கம்
பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன், இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான SLR விகிதத்தை 0.50 சதவீதத்தில் இருந்து, 22 சதவீதமாக ஆகஸ்ட் 9-ம் தேதியுடனான இரண்டாவது வாரத்தில் குறைத்திருந்தது. இதே போன்று ஜுன் மாதத்தில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையில் ரூ.40,000 கோடியை புழக்கத்தில் கொண்டு வந்திருந்தது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications