டெல்லி: ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துவித்துள்ளது. மேலும் 5.7 சதவீதத்தை எட்டியதை தொடர்ந்து இருவருட உயர்வை எட்டியது குறப்பிடதக்கது.

புதிய அரசின் முக்கிய திட்டங்கள் மற்றும் அதிகப்பிடியான அன்னிய முதலீடு அனுமதி மற்றும் வளர்ச்சி திட்டங்களின் காரணமாக 2 வருடமாக சரிந்திருந்த நாட்டின் வளர்ச்சி தற்போது மீண்டுள்ளது. மேலும் நடப்பு கணக்கு பற்றாக்குறை தற்போது வலுவான நிலையில் உள்ளது. தங்க இறக்குமதி மற்றும் அதன் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் காரணமாக நாட்டின் தங்க இறக்குமதி குறைந்துள்ளது குறிப்பிடதக்கது.
ஆனால் கடந்த நிதியாண்டில் 3.9 சதவீதம் சரிவடைந்திருந்த சுரங்க துறை உற்பத்தியை நடப்பு நிதியாண்டில் 2.1 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளது.
மேலும் நடப்பு நிதியாண்டில் அதிகப்படியான வளர்ச்சி கண்ட துறை நிதி சேவைத் துறையாகும். இக்காலகட்டத்தில் இத்துறை 10.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அதுபோல தயாரிப்பு துறையின் உற்பத்தி 3.5 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது.
இதேபோல் மின்சாரம், எரிவாயு துறைகள் தலா 10.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. போக்குவரத்து, தகவல் தொடர்பு ஆகியவை முறையே 2.8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
ஆனால் வேளாண் துறை வளர்ச்சி 3.8 சதவீதமாகக் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications