பெங்களுரூ: இந்திய ஐடித்துறை கடந்த 10 வருடங்களில் பல பரிமாணங்களிள் வளர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த 5 வருடத்தில் இந்தியாவில் இலட்சக்கணக்கான புது நிறுவனங்கள் உருவாகி வருகியுள்ளது. இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தின் சீஇஓ விஷால் சிக்கா மற்றும் விப்ரோ நிறுவனத்தின் வியூக குழு தலைவர் ரஷித் பிரேம்ஜி இருவரும் (இரு நிறுவனங்களும்) இந்தியா மற்றும் உலக நாடுகளில் உள்ள சிறு நிறுவனங்களை அதிகளவில் கைப்பற்ற முடிவு செய்துள்ளனர்.
குறிப்பாக வங்கித்துறையில் இயங்கும் சிறு நிறுவனங்களை அதிகளவில் கைபற்ற சிக்கா மற்றும் ரஷித் முடிவு செய்துள்ளனர். வங்கியியல் மென்பொருள் உருவாக்குவதில் இந்தியாவில் தற்போது தலை சிறந்து விளங்குகிறது, இத்துறை செயல்பாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இத்தகைய திறன்வாய்ந்த சிறு மற்றும் புதிய நிறுவனங்கள் பெரும் உதவியாக இருக்கும்.
47 நிறுவனங்கள்
கடந்த 2005ஆம் ஆண்டு முதல் விப்ரோ நிறுவனம் சுமார் 37 சிறு நிறுவனங்களை கைபற்றியுள்ளது. இதே காலகட்டத்தில் இன்போசிஸ் நிறுவனம் 10 நிறுவனங்களை கைபற்றியதாக எக்னாமிக்ஸ் நாளிதழ் தெரிவிக்கிறது.
பெரு நிறுவனங்கள்
இந்தியாவின் பெரு நிறுவனங்கள் சிறு நிறுவனங்களை கைபற்றும் நோக்கம் இருந்ததல்லை, 2003ஆம் ஆண்டு முதல் விப்ரோ முதன்முதலில் இத்தகைய முடிவிற்கு வந்தது. இதை தொடந்து 2005ஆம் ஆண்டு முதல் இன்போசிஸ் நிறுவனமும் இதே பார்முலாவை பின்தொடர்ந்தது.
டேட்டா அனல்டிக்ஸ்
வங்கித்துறை நிறுவனங்களை தொடர்ந்து பெரு நிறுவனங்கள் டேட்டா அனல்டிக்ஸ் மற்றும் ஆர்டிஃபிசியல் இன்டலிஜன்ஸ் நிறுவனங்களை கைபற்ற ஆர்வம் காட்டுகின்றனர். இத்தகைய நிறுவனங்களை கொண்டு சில்லறை வணிகம் மற்றும் சுகாதாரத்துறையில் தனது செயல்பாட்டை மேம்படுத்திக்கொள்ள முடியும் என இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
சுவிஸ் நிறுவனம்
கடைசியாக இன்போசிஸ் நிறுவனம் கடந்த 2012ஆம் ஆண்டு சுவிஸ் நாட்டை சேர்ந்த மேலாண்மை நிறுவனமான லோடுஸ்டோன் என்ற நிறுவனத்தை 350 மில்லியன் டாலருக்கும் கைபற்றியது.
இந்த பார்மூலா தொடரும்...
சிறு நிறுவனங்களை கைபற்றும் நடவடிக்கை அடுத்த நிதியாண்டிற்கு தொடரும் என விஷால் சிக்கா மற்றும் ரஷித் பிரேம்ஜி ஆகியோர் தெரிவித்தனர்.
இன்போசிஸ்
நடப்பு நிதியாண்டில் அதிகப்படியான சிறு நிறுவனங்களை கைபற்ற முடிவு செய்துள்ளதாகவும், இதன் மதிப்பு 100 மில்லியன் டாலர் முதல் 250 மில்லியன் டாலர் என்ற அளவில் இருக்கும் இன்போசிஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரிலையன்ஸ் - மைக்ரோசாப்ட்
அதேபோல் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் இணைந்து இந்தியா மற்றும் உலக நாடுகளில் மிகப்பெரிய அளவில் டெக்னாலஜி சார்ந்த நிறுவனங்களை அதிகளவில் கைப்பற்ற போவதாக தெரிவித்துள்ளனர்.
போட்டியும்... பயமும்...
இந்த சிறு நிறுவனங்களின் வளர்ச்சியின் காரணமாக பெரு நிறுவனங்களின் ஆதிக்கம் சந்தையில் குறைந்ததை தொடர்ந்து, இதனை முழுமையாக கைபற்ற பெரு நிறுவனங்கள் துடிப்பதாகவும் சில கருத்துகள் நிலவி வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications