இந்திய சந்தையில் தனது முதலீட்டை 2 மடங்கு உயர்த்த திட்டம்!! ஜப்பான்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடனான நரேந்திர மோடியின் இன்றைய சந்திப்பில், இந்தியா சந்தையில் தனது அன்னிய முதலீட்டை அடுத்த 5 வருடங்களில் 2 மடங்காக உயர்த்த விரும்புவதாக ஷின்டோ அவர்கள் மோடியுடன் தெரிவித்தார். கடந்த நிதியாண்டில் ஜப்பான் இந்திய சந்தையில் சுமார் 2 பில்லியன் டாலர் அளவு முதலீடு செய்தது குறிப்பிடதக்கது.

 

மோடி அவர்களின் இந்த 5 நாள் பயணம் ஜப்பான் இந்தியாவிடையே வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் நட்புறவு மேம்படுத்தும் நோக்கத்துடனே மேற்கொள்ளப்பட்டது. இந்த நட்பு சீனாவுடனான பலவீனத்தை கண்டிப்பாக குறைக்கும் எனவும் கருத்து நிலவுகிறது.

அணுஆயுத ஒப்பந்தம்

அணுஆயுத ஒப்பந்தம்

மேலும் இந்த சந்திப்பில் முக்கிய இடம் பிடித்திருப்பது அணுஆயுத ஒப்பந்தம், இதில் சுமுகமான பேச்சுவார்த்தை இரு நாடு பிரதமர்களுக்கு இடையே நடைபெற்று வருகிறது எனவும் தகவல் கிடைத்துள்ளது.

ராணுவ பயிற்சி

ராணுவ பயிற்சி

மேலும் இந்திய கடற்படையுடன் ஜப்பான் பயிற்சியில் ஈடுப்படவும் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கிடையில் ராணுவ பயிற்சிக்கு அமெரிக்காவும் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடதக்கது.

ரயில்வே துறை

ரயில்வே துறை

மேலும் இந்தியாவில் அதிகவேக ரயில்வே பாதையை அமைப்பது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கணவு, இத்திட்டத்தில் 100 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது என்றும் ஷின்சோவுடன் மோடி அவர்கள் தெரிவித்தார். மேலும் அதுகுறித்து அத்துறை அதிகாரிகளிடம் பேசுவதாக ஷின்சோ பதிலளித்தார்.

மின் உற்பத்தி
 

மின் உற்பத்தி

உத்திர பிரதேசத்தில் உருவாக இருக்கும் ஒரு மின்உற்பத்தி நிலையத்திற்கு ஸ்டேட் வங்கி மற்றும் ஜப்பான் பாங்க பார் இண்டர்நேஷ்னல் கோஆப்ரேஷன் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து ஒரு கடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 21 பில்லியன் டாலர் ஆகும். இதன் மூலம் ஜப்பானில் இருந்து நீராவி ஜெனரேட்டர் பொருட்கள் வாங்க எதுவாக இருக்கும் எனவும் ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Japan aims to double India investment in five years: Report

Japanese Prime Minister Shinzo Abe will tell his Indian counterpart Narendra Modi at a summit on Monday that Japan aims to double its direct investment in India in five years from some $2 billion last year, the Nikkei business daily reported.
Story first published: Monday, September 1, 2014, 18:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X