டெல்லி: இந்திய கிராமப்புறங்களை மேம்படுத்தும் நோக்கில் ஏழை எளியோருக்கும், வீடுகள் அல்லாதோருக்கும் 3 கோடி விடுகள் கட்ட, நிதின் கட்கரி தலைமையிலான கிராமப்புற வளர்ச்சி அமைச்சகம் சுமார் 3.45 இலட்சம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நேஷ்னல் கிராமின் ஆவாஸ் மிஷன் திட்டம் வருகிற 2022ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முந்தைய காங்கிரஸ் அரசின் கிராமப்புற வளர்ச்சி திட்டத்தை விட சிறப்பாக திட்டமிட்டுள்ள மோடி அவர்களின், "அனைவருக்கும் வீடு" என்ற கிராமப்புற வளர்ச்சி திட்டத்திற்கு வருடத்திற்கு 50,000 கோடி ருபாய் என்ற அளவு நிதி ஒதுக்க திட்டமிட்டுள்ளார்.
நேஷ்னல் கிராமின் ஆவாஸ் மிஷன் திட்டம்
இத்திட்டத்தின் மூலம் இந்திரா ஆவஸ் யோஜன் திட்டத்தின் படி வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கும், புதிய திட்டத்தின் படி வீடு அல்லாதோருக்கும் வீடு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்திற்கு திட்டக்குழு மற்றும் சுகாதாரத் துறையின் கருத்துகளுடன் சேர்த்து நிதி அமைச்சகத்தின் இறுதி ஒப்புதலுக்கும் அனுப்பப்படும் என கிராமப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
தனியார் நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு
மேலும் இத்திட்டத்திற்கு தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும், பொருளாதாரத்தில் வலிமையான மாநில அரசு 25 சதவீத நிதியுதவியை அளிக்க முடியும் என இந்தியா ரேட்டிங்ஸ் மற்றும் ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கட்டிட செலவுகள் அதிகரிக்கப்பு
நாட்டின் நிலையற்ற பொருளாதராத்தின் காரணமாக அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது இதனால் கட்டிட செலவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்
இதன் படி சமவளி நிலங்களில் கட்டப்படும் வீடுகளுக்கான பட்ஜெட் விலை 57 சதவீதம் உயர்த்தப்பட்டு, 70,000 ரூபாயில் இருந்து 1.10 இலட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் மலை சார்ந்த பகுதிகளில் கட்டப்படும் வீடுகளுக்கு 67% உயர்த்தப்பட்டு 1.25 இலட்சம் ரூபாய் என்ற அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
இத்திட்டத்தின் மூலம் நாட்டில் கிராமபுறங்களில் அதிகப்படியான வேலைவாய்ப்பு உருவாகும், மேலும் இதன் மூலம் அவர்களின் வாழ்க்கை தரம் உயரும் எனவும் கிராமப்புற வளர்ச்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொழிற்நுட்பம்
மேலும் இக்கட்டுமானத்தில் அதிகப்படியான தொழிற்நுட்பங்களை உட்படுத்தி செலவுகளை குறைக்கவும், மக்களுக்கும் சிறந்த வாழ்விடத்தை அமைக்கவும் கிராமப்புற வளர்ச்சி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக சிறந்த சுகாதார வசதிகள் மற்றம் சோலார் பேனல்களை பொருத்துதல் போன்றவை இக்கட்டிடங்களில் இடம் பெறும்.
கழிவறைகள்
மேலும் புதிதாக கட்டப்படும் வீடுகளில் கழிவறைகள் வீட்டிற்குளே கட்ட முடிவு செய்துள்ளது கிராமப்புற வளர்ச்சி அமைச்சகம் இதற்காக கட்டுமானத்திற்கான இடத்தை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications