விஜய் மல்லையா ஒரு "நாணயமற்றவர்"!! யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா

மும்பை: கடன் கடலில் மிதக்கும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லையா அவர்களை நாணயமற்றவர், வேண்டுமென்றே தவறிழைத்தவர் என்று இந்நிறுவனத்திற்கு கடன் அளிந்த வங்கிகளில் ஒன்றான யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. இவ்வங்கி விஜய் மல்லையா மற்றும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மூன்று உயர் அதிகாரிகளையும் நாணயமற்றவர் என்று அறிவித்துள்ளது.

ஏற்கனவே விஜய் மல்லையாவிற்கும், கிங்பிஷர் நிறுவனத்திற்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் உள்ள நிலையில் இந்த புதிய பிரச்சனை இந்நிறுவனத்திற்கு மேலும் ஒரு தலைவலியாக இருக்கும். "நாணயமற்றவர்" என்று ஒரு வங்கி ஒருவரை அறிவித்தால் என்ன ஆகும்??? வாங்க பார்போம்...

நாணயமற்றவர்

நாணயமற்றவர்

ஒரு நபரை நாணயமற்றவர் என்று வங்கி அறிவித்துவிட்டால் அவர் எந்த ஒரு வங்கியிலும் கடன் பெற முடியாது, அதேபோல் அவர் எந்தொரு நிறுவனத்திற்கும் தலைவராகவும் இருக்க முடியாது. இதனால் தற்போது விஜய் மல்லையா அவரது யுணைடெட் ஃபிரிவரிஸ் நிறுவனத்திற்கு இனி தலைவராக இருக்க முடியாது.

யுனைட்டட் பேங்க் ஆஃப் இந்தியா

யுனைட்டட் பேங்க் ஆஃப் இந்தியா

இன்று காலை 10.30 மணியளவில் யுனைட்டட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் செயல் இயக்குனர் திரு. தீபக் நரங் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"விஜய் மல்லையா தலைமையிலான கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனம் வங்கியில் பெற்ற கடன் திருப்பி செலுத்தாத காரணத்தினால், மல்லையா அவர்களையும், நிறுவனத்தின் இதர முன்று தலைவர்கள் ரவி நெடுங்காடி, அனில்குமார் கங்குலி, சுபாஷ் குப்தே ஆகியோரை நாணயமற்றவர் என்று அறிவித்துள்ளோம்." என்று அவர் கூறினார்.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

மேலும் தீபக் நரங் கூறுகையில் அதுகுறித்து ரிசர்வ் வங்கியிடம் ஒப்பதல் பெற்ற பின்னரே வங்கி இவ்வாறு அறிவிக்கிறது. மேலும் கிங்பிஷர் நிறுவனமும் இதுகுறித்த செய்திகளை ஒப்புக்கொண்டது.

கடன்

கடன்

கிங்பிஷர் நிறுவனம் சுமார் 17 வங்கி மற்றும் நிதியியல் நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளது. இவ்வங்கிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்நிறுவன சொத்துக்களை விற்று வங்கிகளை பிரித்துக்கொண்டது. ஆனாலும் கடனின் அளவு மிகவும் அதிகம் என்பதால் வங்கிகள் தொடர்ந்த மல்லையா மீதும் நிறுவனத்தின் மீது வழக்குகள் பதிவு செய்து வந்தது. எந்த வழக்கிற்கும் தகுந்த தீர்ப்பும், பணமும் கிடைக்காத வங்கிகள் இந்த முடிவுக்கு வந்துள்ளது.

பிற வங்கிகள்

பிற வங்கிகள்

யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவை தொடர்ந்து ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிகளும் இவர் நாணயமற்றவர் என்று அறிவிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளது.

விஜய் மல்லையா எங்கே???

விஜய் மல்லையா எங்கே???

இங்கே எவ்ளோ பெரிய பிரச்சனை நடந்துகிட்டு இருக்கும் இந்த விஜய் மல்லையா பையன் எங்கனே தெரியல.. ஆள் அட்ரஸ்சே காணோம்.

பங்கு சந்தை

பங்கு சந்தை

இந்த நிறுவனத்தை பங்கு சந்தையில் வைத்திருப்பதே அதிகம் என்ற நிலையில் இருக்கும் கிங்பிஷர் நிறுவனத்தின் பங்குகள் 2.65 ரூபாய் என்ற நிலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 3000 பங்குகள் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. "உன் கதை முடியும் நேரம் இது..."

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+