டெல்லி: மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி திடீரென திங்கட்கிழமை மாலையில் தலைநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த சில மாதங்களாக அவரின் உடல் நலமில்லாத காரணத்தால், டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் ஒரு சிறு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அறுவை சிகிச்சை எவ்வகையானது என்பதை பற்றி மருத்துவமனை தெரிவிக்கவில்லை.
கடந்த ஜூலை 10ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அவர் பட்ஜெட் தாக்கலின் நீண்ட உரையில் களைப்பான நிதியமைச்சர் இருக்கையில் அமர்ந்து மீதமுள்ள பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதை பிற அரசியல் தலைவர்களும் ஆதரித்தனர்.
இந்நிலையிலும் அவர் கடந்த வாரம் நாட்டின் மொத்த உற்பத்தி விகிதம் 5.7 சதவீதம் எட்டியதை பெருமையுடன் தெரிவித்தார். இதுமட்டும் அல்லாமல் பிற அடுத்த நிதியாண்டுகளில் இந்த சதவீதம் தொடர்ந்து உச்சத்தை தொடும் எனவும் அறிவித்தார்.


Click it and Unblock the Notifications