அகமதாபாத்: இன்றளவில் மக்கள் பொரும்பாலும் நீண்ட கால காப்பீட்டு திட்டத்தை விட, குறுகிய கால காப்பீட்டு திட்டத்தையே அதிகளவில் விரும்புகின்றனர், இதனால் நீண்ட முதலீட்டு திட்டகளில் முதலீடு குறைந்துள்ளதாக லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மூத்த மேலாளர் அஜய் குமார் தெரிவித்தார்.
இதற்கு முக்கிய காரணம் மக்கள் காப்பீட்டு திட்டத்தை, தனது குடும்பத்தை பாதுகாக்கும் ஒரு கருவி என்று பார்க்காமல் அதை ஒரு முதலீட்டு திட்டமாக மட்டுமே பார்க்கின்றனர். இதனாலேயே நீண்ட கால முதலீட்டை இன்றைய தலைமுறையினர் விரும்புவதில்லை என்று அஜய் குமார் புதிய காப்பீட்டு திட்ட அறிமுக விழாவில் தெரிவித்தார்.
"ஜீவன் ஷாகன்"
நிறுவனத்தின் ஆய்வுகள் படி மக்கள் குறுகிய கால முதலீட்டை மட்டும் விரும்புவதால், மக்களுக்கும் பயன்தரும் வண்ணம் "ஜீவன் ஷாகன்" என்னும் 12 வருட முதிர்வு காலம் கொண்ட புதிய காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம் என அவர் தெரிவித்தார்.
4 வருட ஆய்வுகள்
எல்.ஐ.சி நிறுவனம் இந்தியா முழுவதும் நடத்திய ஆய்வுகளில் கடந்த 3- 4 வருட ஆய்வில் ஆயுள் காப்பீட்டை மட்டுமே ஆதிகளவில் விரும்பிய இந்திய மக்கள் தற்போது, குறுகிய கால திட்டம், ஒய்வுதிய திட்டம் மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டம் போன்றவற்றை அதிகளவில் விரும்ப துவங்கியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆயுள் காப்பீடு முதலீடு அல்ல...
மேலும் ஆயுள் காப்பீடு என்பது நம் தேவைக்காக வளர்க்கும் பணம் காய்க்கும் மரம் என்று மட்டும் நினைக்க வேண்டாம். குறிப்பாக நீண்ட கால ஆயுள் காப்பீட்டு திட்டம் உங்களின் மறைவிற்கு பிறகு உங்கள் குடும்பம் மற்றும் உங்களை சார்ந்து வாழ்பவர்களுக்கும் உலகை எதிர்கொள்ள ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கும்.
சென்னையின் அடையாளம்
எல்ஐசி நிறுவனம் சென்னையில் துவங்கி 58ஆண்டுகள் ஆனதையொட்டி அடுத்த 7 நாட்களுக்கும் சென்னையின் அடையாளமாக விளங்கும் எல்ஐசி வளாகத்தில் கொண்டாட திட்டமிட்டுள்ளது நிர்வாகம். மேலும் எல்ஐசி நிறுவனத்தின் வளர்ச்சியின் முக்கிய பங்கு தமிழகத்திற்கும் அதிகளவிலான பங்கு உண்டு என எல்ஐசி தென் மண்டல மேலாளர் சித்தார்த்தன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications